*நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை வழங்கும் மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் …மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதிகளை மறு வரை செய்த பிறகு இட ஒதுக்கீட்டை அமல் செய்திட முடிவு.
*பழைய கட்டிடத்தில் இருந்து புதிய நாடளுமன்றக் கட்டிடத்திற்கு அலுவல்கள் மாறிய பிறகு முதல் நிகழ்வாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் … நாடாளுமன்றத்தின் மூன்று ஆயுட்காலம் வரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு.
*புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று பிரதமர் மோடி பேச்சு .. பழைய கட்டிடத்திற்கு அரசிய சாசன சபை என்று பெயர் சூட்டல்.
*பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்குவது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் .. சோனியா காந்தி தகவல்.
*வருமானத்திற்கு அதிகமாக ரூ 78 கோடி சொத்துக் குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரியின் நேர்முகச் செயலாளர் வெங்கட கிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டும் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்களும் சிறைத் தண்டனை..அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் சரணடையுமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி.
*கடந்த 1991- 1996 வரை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வெங்கட் கிருஷ்ணன் மீதான புகார் ஆகும் .. விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதற்கான மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனை அறிவித்தது
*மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை டெல்லியில்அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு.. தமிழ்நாட்டு்க்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு மனு.
*காவிரியில் ஆங்காங்கு சிறு சிறு அணைகளைக் கட்டி கர்நாடம் தண்ணீர் தர மறுக்கிறது .. மத்திய அமைச்சரரை சந்தித்த பிறகு பேட்டியளித்த துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதாகவும் விளக்கம்.
*மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் உத்தரவு.. வட கிழக்குப் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகரிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
*தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிடுவது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளதாக எடப்பாடி விமர்சனம் .. கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யவும் கோரிக்கை.
*திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமலும் போதைப் பொருடகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமலும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் … அரசைக் கண்டித்து 23-ஆம் தேதி அதிமுக சார்பில் பல்லடம் மற்றும் வீரபாண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு.
*அதிமுக தலைமையை சமரசப்படுத்த முக்கிய தலைவர் ஒருவரை சென்னைக்கு பாஜக தலைமை அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்ப்பு.. பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் அதிமுக கூட்டணியை விரும்புவதாகவும் தகவல்.
*தேர்தலுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி அதிமுக அல்ல என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம்.. அண்ணா குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை அண்ணாமலை பேசி வருவதாகவும் புகார்.
*தமிழக சட்டமன்றத்தில் பாஜக நுழையவே அதிமுகதான் காரணம் என்பதை மறந்து அண்ணாமலை பேசிவருவதாக புதுவை மாநில அதிமுக அமைப்பாளர் அன்பழகன் கண்டனம் .. மோடி மீ்ண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக அண்ணாமலை அதிமுகவை விமர்சிப்பதகாவும் புகார்.
*தமிழகத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் …6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25- ஆம் தேதி வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சொட்டு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை.
*கொட நாடு கொலை வழக்கு தொடர்பாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மீது ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்குப் பதிவு செய்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…. கொட நாடு வழக்கோடு தன்னை தொடர்பு படுத்தி கனகராஜ் பேசுவதற்கு தடை கோறும் எடப்பாடி மனு மீது விரைவில் விசராணை நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவிப்பு.
*பைக்கை அதிவேகத்தில் ஓட்டி விபத்தில் சிக்கிய பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் மீது மொத்தம் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு.. அக்டோபர் 3- ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்த சிறையில் அடைப்பு.
*இளைஞர்களுக்கு தவறான வழகாட்டுதலை காட்டும் வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் எதிரொலி … வாசனின் ஓட்டுநர் லைசென்ஸை ரத்து செய்யுமாறு காவல் துறை சார்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை
*நாமக்கலில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்த அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு … உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க நடவடிக்கை.
*கனடாவில் கடந்த ஜுன் மாதம் காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்டுகளுக்கு பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு… கனடா நாட்டின் குடிமகன் என்பதால் நிஜ்ஜார் கொலை பற்றி கனடா புலனாய்வு அமைப்புகள் விசாரி்த்து வருவதாகவும் அறிவிப்பு.
*ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை அடுத்து இந்திய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற்றி கனடா அரசு உத்தரவு… பதிலடியாக கனடா தூதரக அதிகாரி டெல்லியை விட்டு ஐந்து நாட்களில் வெளியேறுமாறு உத்தரவிட்டு இந்தியா நடவடிக்கை.
*சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கிய பாதையில் ஆதித்யா எல் 1 பயணிக்கிறது… மேலும் 110 நாட்கள் பயணித்து சூரியனின் எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என்று இஸ்ரோ அறிவிப்பு.
*எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே -5 ஆம் தேதி நீட் தேர்வு.. ஜுன் மாதத்தில் முடிவுகள் வெளியாகம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
*நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அனைவரும் அதிர்ச்சி.. 12-ஆம் வகுப்பு பயின்ற லாரா, சென்னை, டிடிகே சாலையிலுள்ள வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு மன அழுத்தம் காரணம் என்று தகவல்.
*தற்கொலை செய்து கொண்ட மீரா கடந்த ஒரு ஆண்டாக மன அழுத்தப் பரிச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் உறவினர்கள் தகவல் .. மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி சிகிச்சை விவரங்களைப் பெறவும் தேனாம்பேட்டை போலீசார் முடிவு.
*பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் அறிமுகமான நடிகர் பாபு காலமானார் .. சண்டைக் காட்சியில் மேலிருந்து குதித்த போது முதுகெலும்பு உடைந்து 30 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த பாபு உயிர் பிரிந்தது.