*மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைக் கும்பலால் பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சியால் நாடு முழுவதும் அதிர்ச்சி… உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தலையிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.

*குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகளை விளக்கம் வேண்டும்..மணிப்பூர் வழக்கை நாளை விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வு அறிவிப்பு.

*மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம்.. குற்றவாளிகை தப்பவிடமாட்டோம் என்று பிரதமர் மோடி உறுதி.

*நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கொடூரம் பற்றி விவாதம் நடத்த வலியுறுத்தல்.. எதிர்க்கட்சிகள் அமளியால் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் முடக்கம்

*விலைவாசி உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம்..காய்கறி மாலைகளை அணிந்து திமுக அரசுக்கு எதிராக முழக்கம்.

*கைது விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல் முறையீடு..நாளை விசாரிப்பதாக உச்சநீதி மன்றம் அறிவிப்பு.

*வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கு.. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.மற்றும் மனைவியை விடுவித்து விருதுநகர் நீதிமன்றம் தீர்ப்பு.

*அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரிகளில் இருந்து பினாமி பேரில் மண் எடுத்து விற்ற வழக்கு..மேலும் ஐந்து பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன்.

*கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கு… கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு.

* மேல் மருவத்தூர் சித்தர் பீட திருவிழாவை முன்னிட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை.. அதற்குப் பதில் ஆகஸ்டு 5 ஆம் தேதி வேலை நாள் என்று ஆட்சியர் அறிவிப்பு.

*தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்.. மத்திய நீர்வளத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் விநியோகம் ஆரம்பம்.. வீடுகளுக்குச் சென்று நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை.

*நெல்லை பா.ஜ.க.எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ரூ 100 கோடி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்தார் என்று புகார்..பத்திரப் பதிவை ரத்து செய்து சென்னை மண்டல பதிவாளர் நடவடிக்கை.

*நூறு கோடி நிலமும் முறையாக வாங்கித்தான் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.. நீதி மன்றத்தை நாட உள்ளதாக நயினார் நாகேந்திரன் மகன் பேட்டி.

*ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றால் விற்பனை விலையை அதிகரிப்பது அவசியம்..முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் அறிவிப்பு.

*சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் இடங்களை பத்து ஆண்டுகளாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்.. ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*அண்ணாமலை ஜுலை 28- ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கும் நடைபயணத்தால் தமிழ்நாட்டில் பாஜக வலுப்பெறும்… முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான தம்பதியை முறையாக பரமாறிக்கவில்லை என்று புகார்.. வளர்ப்பு மகனிடம் இருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள சொத்து அதிகாளால் மீட்பு.

*காதலிப்பதாகக் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி பணமும் வாங்கிக்கொண்டு மோசடி.. விசிக செய்தி தொடர்பாளர் விக்கிரமன் மீது இளம் பெண் ஒருவர் சென்னை போலிசில் புகார்.

*சென்னை சவுகார் பேட்டையில் நகைப் பட்டறையில் இருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.. அறையில் அடைத்து வைத்து தினமும் 14 மணி நேரம் வேலை வாங்கியதாக புகார்.

*டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பற்றிய வழக்கு.. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

*மராட்டியத்தில் ராய்காட் மாவட்டத்தில் கடுமையான மழையால் மலைக்கிராமத்தில் நிலச்சரிவு.. 15 பேர் உயிரிழந்த பரிதாபம்.

*நாடாளுமன்றத்தில் சோனியா காந்தியிடம் சென்று நலம் விசாரித்தார் பிரதமா் மோடி.. நலம் விசாரிப்புக்கு பின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றி.

*சந்திராயன்-3 விண்கலம் நான்காவது முறை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.. இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *