தலைப்புச் செய்திகள் (21-07-2023)

*ராகுல் காந்தி மேல் முறையீ்ட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்டு 4 -ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.. அவதூறு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்று தந்த பர்ணேஷ் மோடி மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

*மணிப்பூர் மாநிலம் பற்றிய விவாதத்தை உடனே நடத்தவும் பிரதமர் பதிலளிக்கவும் எதிர்க்கட்சிகள் கோரி்க்கை.. நாடாளுமன்ற இரு அவைகளும் அமளியால் முடக்கம்.

*இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பாக விளக்கம் தரவேண்டும்.. மணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு.

*டெல்லி வந்து உள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே – பிரதமர் மோடி முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து.. நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்.

*இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே அமல் படுத்த வேண்டும்.. தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் ரணிலிடம் மோடி வலியுறுத்தல்.

*அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 26- ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.. மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்.

*தமிழகம் முழுவதும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே பாடதிட்டம்.. மாணவர்கள் கல்லூரி மாறும் போது எளிதாக இருக்கும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கருத்து.

*சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரயில் திட்டத்தை இணைக்க நடவடிக்கை.. 2025 ஆம் ஆண்டு இணைப்புப் பணிகள் முடியும் என தகவல்.

*திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் காவல் நிலைய துணை ஆய்வாளருக்கு மிரட்டல்.. வினோத் என்ற பாஜக நிர்வாகி கைது.

*நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பல்வேறு இடங்களில் பண மோசடி. .சென்னை போலிசில் பவுண்டேஷன் நிர்வாகி புகார்

*சென்னை ஐ.சி.எப். ஆலையில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைகளை தருவதில்லை என்று புகார்.. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் 100-க்கும் அதிகமானவர்கள் 2- வது நாளாக போராட்டம்.

*கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 2013 -ல் நடந்த பேராட்டத்தின் போது போடப்பட்ட வழக்கு.. சுப.உதயகுமார் உள்ளிட்ட மூன்று பேரை விடுவித்து வள்ளியூர் நீதிமன்றம் தீர்ப்பு.

*கடந்த ஆண்டு குறைவான மழை பொழிவால் பயிர் சேதம் அடைந்த பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவித்தது தமிழக அரசு.. ஆறு மாட்டங்களில் 25 பகுதிகளை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து அரசாணை வெளியீடு.

*சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு மூன்று நாளாகியும் துப்புத் துலக்க முடியாமல் போலிஸ் தவிப்பு.. ரயில் நிலையங்கள் பலவற்றில் சிசிடிவி கேமிரா இல்லாததால் வழக்குகளில் துப்பு துலக்க முடியவில்லை என்று புகார்.

*கேரள மாநில அரசின் 53- வது திரைப்பட விருதில் ‘நண்பகல் நேரத்து மயக்கும்’ படத்தில் நடித்த மம்மூட்டி சிறந்த நடிகராக அறிவிப்பு.. மம்முட்டி சிறந்த நடிகருக்கான விருதை பெறுவது எட்டாவது முறை.

*ரேகா படத்தில் நடித்த வின்சி அலோசியஸ் சிறந்த நடிகை.. சிறந்த படத்துக்கான விருது நண்பகல் நேரத்து மயக்கும் படத்துக்கு என்றும் கேரளா அரசு அறிவிப்பு.

*நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-வது ஆண்டு நினைவு தினம்.. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் ஏராளமானவர்கள் அஞ்சலி

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *