*முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித் தொகை ரூ 1000- லிருந்து 1200 ஆக உயர்வு.. தமிழக அமைச்சரைக் கூட்டத்தில் முடிவு.
*எண்ணம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் தான் இருக்கிறது.. தருமபுரியில் திங்களன்று உரிமைத் தொகை முகாமைத் தொடங்கி வைக்க இருப்பதாவும் மு.க.ஸ்டாலின் டுவிட்.
*மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் 1008 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் புகார்.
*சட்டத்துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்..சென்னை ஐ.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தல்.
*சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தாய்மொழியில் பாடங்களை கற்பிப்பது படைப்பாற்றலை அதிரிக்கும் என்று அண்ணாமலை கருத்து.. இதே நடைமுறையை தமிழக அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தக் கோரிக்கை.
*சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 23- ஆம் தேதி முதல் 26- தேதி வரை ஜி – 20 நாடுகள் மாநாட்டுக்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதன் எதிரொலி.. டிரேன்கள் பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை .
*மருத்துவப் படிப்பின் போது மாணவர்களின் மருத்துவ சேவைக்காக வழங்கப்படும் உதவித் தொகையை கட்டாயம் வழங்க வேண்டும்.. மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டிய பணப்பலன்களை கொடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவமதிப்பு வழக்கு.. முன்பு நகராட்சி நிர்வாகத்துறை செயலாராக இருந்த தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகஸ்டு 21- ஆம் தேதி ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*நாடு முழுவதும் 20 சதவிகித எத்தனால் கலந்த எரிபொருளை 2025 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை.. ஜி 20 நாடுகளின் எரிசக்தித் துறை மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்.
*மேகதாது அணைத் திட்டத்தை மரங்களை வெட்டாமல் செயல்படுத்துவதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை.. வனத்துறை அதிகாரிகள் 29 பேர் கொண்ட குழு அமைப்பு.
*பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற வழக்கில் ஐந்தாவது நபர் கைது.. எஞ்சியவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக மணிப்பூர் போலிஸ் தகவல்.
*எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கார்கே தலைமையில திங்களன்று ஆலோசனை.. மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவதுக் குறித்து விவாதிக்க முடிவு
*மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கக் கோரி முழக்கம்.
*மேற்கு வங்கத்தில் மால்டாவில் கடந்த 19- ஆம் தேதி இரண்டு பெண்கள், நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யப்பட்டதாக பாஜக புகார்… மாநில காவல் துறை தலைவர் திட்டவட்ட மறுப்பு
*மராட்டிய மாநிலத்தில் மேலும் கடுமையான மழை பெய்ய வாய்ப்பு..பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிகை விடுத்தது வானிலை மையம்
*ராஜஸ்தான் சட்டசபையில் ரஜேந்திர குடா என்ற அமைச்சர் தங்கள் மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக பேச்சு.. உடனடியாக அமைச்சரை டிஸ்மிஸ் செய்து முதலமைச்சர் அசோக் கேலாட் நடவடிக்கை
*பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 20 சதவிகிதம் ராஜஸ்தானில் தான் நடக்கிறது.. அமைச்சர் சொன்னது உண்மைதான் என்று காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு.
*அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அரசிக்கு கிராக்கி.. அரிசி கிடைக்காமல் ஏராளமானவர்கள் திண்டாட்டம்.
*காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ஜோஸ்பின் மரணம்.. 74 வயதான ஜோஸ்பின் தந்தையின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர்.