*சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…. சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல்.
*இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும் … கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
*கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை என்று மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
*மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் என்பது வழக்கமான ஒரு சட்டம் அல்ல, புதிய இந்தியாவின் ஜனநாயக உறுதிமொழிக்கான பிரகடனம் என்று பிரதமர் மோடி பெருமிதம்…கோடிக்கணக்கான தாய்மார்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளதாக பாஜக பெண் நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் மோடி உரை.
*மக்களை தேடி மருத்துவ திட்டம் அனைவருக்கும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளதாக மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…. அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் திட்ட குழு சிறப்பாக செயல்படுவதாக பெருமிதம்.
*மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு… தற்போது நடைபெற்று வரும் முகாம்களில் மேல்முறையீட்டு அதிகாரியிடம் விண்ணப்பம் செய்யலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
*மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்…. நாட்டில் 3 செயலாளர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏன் என்ற தரவுகளை முன் வைக்காமல் எப்படி முடிவுகள் எடுக்க முடியும் என்று கேள்வி.
*தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் 5,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்திருப்பது மகிழ்ச்சி… குறுவை சாகுபடிகளில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் நிவாரணம் அளிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
*சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே…. சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என நிர்ணயம்; ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்திப்பு…ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனின் இருக்கைகளை மாற்றி அமைக்க கோரிக்கை.
*ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என 3வது முறையாக கோரிக்கை வைத்துள்ளோம்… சபாநாயகர் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
*கும்பகோணத்தில் மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு…கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
*5 நாள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஒருநாளுக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதால் ஒத்திவைப்பு.
*நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளி பட்ட போதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை… 14 நாள் உறக்கத்துக்கு பின் இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த சிக்னலும் வரவில்லை என இஸ்ரோ தகவல்.
*போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த ஊதியத்தைத் தாமதிப்பது, வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல… நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றும் விதத்தில் தான் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எச்சரிக்கை.
*அப்போதே கருணாநிதி என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தாதாக கமல்ஹாசன் பேச்சு… மீண்டும் கோவையில் போட்டியிடப்போவதாகவும் தகவல்.
*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் விழா கோலாகலம்… ஐந்தாம் நாளான இன்று கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி… 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி.