தலைப்புச் செய்திகள் (23-09-2023)

* கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் போது ஏமார்ந்தது போன்று வாக்காளர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.. இந்தியாவுக்கா பேசுவோம் என்ற வீடியா பதிவில் பேச்சு.

* இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று குற்றஞ்சாட்டும் மோடி அவருடைய ஆட்சிய் பற்றிய சிஏஜி அறிக்கையை படித்துப் பார்க்க வேண்டும் … சிஏஜி அறிக்கைப் பற்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்காதது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி.

* தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் தரவேண்டும் என்ற மேலாண்மை வாரிய உத்தரவுக்கு எதிராக கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் நடை பெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்கை முடக்கம்.. சலைகளில் அமர்ந்து பல இடங்களில் மறியல்.

* நெல்லை – சென்னை இடையோன வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு ஆரம்பம் … சாதாரண ஏசி இருக்கைக்கு ரூ 1610, முதல் வகுப்பு இருக்கைக்கு ரூ 3005 கட்டணமாக நிர்ணயம்.

* ஆசிய வியைாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர்கள் கலந்து கொண்டு இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு .. ஆசிய அளவிலான பதக்கப்பட்டியலில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்திற்கு வரலாம் என்று கணிப்பு.

* சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா..ஏற்கனவே டெஸ்ட் மற்றும் 20 ஓவர்ஆட்டங்களிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதால் வீரர்கள் மகிழ்ச்சி.

* வாரணாசியில் ரூ.450 கோடி மதிப்பில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி…31 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் கட்டப்பட உள்ளது.

* மகளிர் இடஒதுக்கீடு மசோதா நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை அதிகரித்துள்ளது… 30 ஆண்டுகாலம் நிலுவையில் இருந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதம்.

* தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு… கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மீகம் அல்ல, உயிரினம் கஷ்டப்படுவதை பாத்த்து கவலைகொள்வதும் ஆன்மீகம் தான் என்று கருத்து.

* இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அரசு மரியாதை.

* திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயில், குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து… ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ பற்றிய நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

* ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு… தனது யோசனையை தமிழக அரசு எடுத்துக்கொண்டாலும் பொறாமைப்படாமல் பாராட்டுவதாக பேச்சு…

* “அதிமுக பாஜக இடையே மோதல் இல்லை; உட்கட்சிப் பிரச்னை” என்றும் அமைச்சர் உதயநிதி விமர்சனம்… மகளிருக்கு 1000 ரூபாய் திட்டம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கருத்து.

* சீனாவில் ஹாங்சூ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலகலமாக ஆரம்பமானது .. 45 நாடுகளில் இருந்து வந்து உள்ள 12 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *