*நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் வேட்பு மனுத் தாக்கல் சூடுபிடிக்கிறது … அதிமுக உட்பட அரசியல் கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்ய முடிவு.
*சேலத்தில் சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி … மாநில உரிமைப் பறிப்பு, போதைப் பொருள் புழக்கம் போன்றவற்றை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று சூளுரை.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி தொகுதியில் நாளை பரப்புரை செய்கிறார் … முக்கிய மையங்களில் திறந்த வேனில் இருந்தபடி வாக்கு சேகரிக்க ஏற்பாடு.
*கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாகவும் ஆந்திராவில் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் திருமாவளவன் பேட்டி …. கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கேரளாவில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் ஒரு இடத்திலும் விசிக போட்டியிட உள்ளதாகவும் விளக்கம்.
*திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்பவர்களுக்கு கமல்ஹாசன் விளக்கம்… நமது டிவி, நமது ரிமோட்; அது இங்குதான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம் என்று பதில்.
*திமுக கூட்டணியை ஆதரித்து 30 இடங்களில் பரப்புரை செய்ய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு … முதல் பரப்புரையை 28ஆம் தேதி ஈரோட்டில் இருந்து ஆரம்பிக்க முடிவு.
*ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததை அடுத்து கோவை மருத்துவமனையில அனுமதி … ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தகவல்.
*மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அமமுகவின் இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு … தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன், திருச்சியில் செந்தில் நாதன் போட்டி.
*நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் … சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம், நாகர் கோயிலில் விஜய் வசந்த்,கரூரில் ஜோதிமணி, விருது நகரில் மாணிக் தாகூர் ஆகியோர் மீண்டும் போட்டி ஆரணி தொகுதி எம்.பி.யாக இருந்த விஷ்ணு பிரசாத் கடலூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தம்.
*கிருஷ்ணகிரி தொகுதியில் செல்வக்குமாருக்குப் பதிலாக கோபிநாத்தை அறிவித்துள்ளது காங்கிரஸ்… திருவள்ளூரில் ஜெயக்குமாரை ஓரங்கட்டிவிட்டு சசிகாந்த் செந்தில் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிறுத்தம்-
*காங்கிரசுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள மயிலாடு துறை மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை… கடுமையான போட்டி நிலவுதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி.
*அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு… ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல புத்தகம், ஓட்டுநர் உரிமம், PAN CARD, PASS PORT, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதெனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
*கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு… யாரும் தனக்குப் போட்டியில்லை, பிரச்சினைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வந்திருப்பதாக பேச்சு.
*உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது குருத்தோலை ஞாயிறு.குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா கீர்த்தனை பாடி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பவனி.
*கைது செய்யப்பட்டு அமலாகத் துறையால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகளுக்கு உத்தரவு… குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி டெல்லி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
*கெஜ்ரிவால் தொடா்ந்து அரசை வழிநடத்துவார் என்று டெல்லி அமைச்சர் அதிஷி பேட்டி .. சிறையில் இருந்து அரசை வழிநடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று விளக்கம்.
*ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு… தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்துள்ளது ரஷ்ய பாதுகாப்புப் படை.தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் சில தொடர்புகள் இருந்துள்ளதாகவும், அவர்கள் ரஷியாவின் எல்லையை கடந்து உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் தகவல்.
*இசை நிகழ்ச்சி மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் … பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கீவ் மேயர் வேண்டுகோள்.
*பப்புவா நியு கினியா நாட்டில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவு .. சேத விவரங்கள் உடடினடியாக தெரியவரவில்லை.
*விஜய் அடுத்ததாக நடிக்கும் கடைசி படத்திற்கு அவருக்கு ரூ 250 கோடி என்று தகவல் … இப்போது நடிக்கும் கோட் படத்திற்கு ரூ 200 கோடி பெற்ற சம்பளம் கடைசி படம் என்பதால் ரூ 250 கோடியாக உயருகிறது.
*தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்தார் தோனி…படக் குழுவிற்கு பாராட்டு.
*தமிழ்நாட்டில் அடுத்த ஓரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் .. வானிலை மையம் தகவல்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447