*மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதமும் பிரதமர் பதிலும் தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரு அவைகளும் 3-வது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
*இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்.. மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவற்கு கண்டனம்.
*மணிப்பூர் நிலமை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக் வேண்டும்.. உள் துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.
*மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் மழைக் கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்.. மணிப்பூர் நிலைமையை எழுப்பி ரகளை செய்ததாக கூறி நடவடிக்கை.
*வட மாநில கன மழையால் யமுனா ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு.. தலைநகர் டெல்லியில் எச்சரிக்கை நிலை.
*சென்னை பல்கலைக் கழகத்தில் ஜுலை 6- ஆம் தேதி பட்டமளிப்பு விழா.. குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு பங்கேற்பு.
*தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.15 சதவிகிதமாக வழங்க முடிவு..வைப்பு நிதி வாரியம் அறிவிப்பு.
*அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாருக்கு நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.. அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து அமலாக்கத்துறை ஆலோசிப்பதாக தகவல்.
*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவுக்கான முகாமை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. உரிமைத் திட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக முதல்வர் கண்டனம்.
*பாஜக அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு.. ஜுலை 28- ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் அமித் ஷா உடன் கலந்து கொள்ள வலியுறுத்தல்.
*மதுபான சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக வழக்கறிஞர் பாலு வழக்கு.. சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறாமல் திருத்தம் செய்திருந்தால் செல்லாது என்று உயர்நீதிமன்றம் கருத்து.
*ஓமலூர் அருகே பெயிண்டுடன் கலக்கப்படும் தின்னர் குடோனில் தீ விபத்து..நாச வேலையா என்று போலிஸ் விசாரணை.
*மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்.. பல ஆயிரம் பெண்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்.
*டுவிட்டர் பெயர் ‘எக்ஸ்’ என்று மாற்றம்.. அடையாளச் சின்னமாக இருந்த பறவையையும் நீக்கிவிட்டு ‘x’ ஐ சின்னமாக்கினார் எலன் மஸ்க்.
*காலநிலை மாற்றத்தால் வெகு விரைவில் பாதிப்புகள் ஏற்படுவது உறுதி.. சென்னையில் தொடங்கிய பேரிடர் ஆபத்துப் பற்றிய ஜி – 20 கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் மிஸ்ரா கருத்து.
*அடுத்த தலைமுறையை பாதுகாக்க கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது அவசியம்.. ஜி-20 மாநாட்டின் கவனத்தை ஈர்க்க சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அன்புமணி பேச்சு.
*வாரனாசி ஞான வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த 26- ஆம் தேதி தடை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு.
*நீதிமன்றங்களில் அம்பேத்கார் படத்தை அகற்றக் கூறி சுற்றறிக்கை வெளியிட்டதற்கு எதிர்ப்பு.. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம்.
*தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஜூலை 31ம் தேதி உள்ளூர் விடுமுறை; சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் அறிவிப்பு.
*கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ரூ 7,53,860 கோடி….நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்.
*குஜராத்,மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை..தெலங்கான மாநிலத்திலும் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு.
*சென்னை மற்றும் புறநகரில் மாலை நேரத்தில் திடீர் மழை.. அரை மணி நீடித்த மழையால் இதமான சூழல்.
*தென்காசி மாவட்டத்திற்கு வரும் ஜூலை 31ம் தேதி உள்ளூர் விடுமுறை; சங்கரன் கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் அறிவிப்பு