*அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பதுக் குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யவேண்டும்..சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவு.
*செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்ற முந்தைய தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு கருத்து.. அமலாக்கத்துறை காவலுக்கு எப்படி உத்தரவிட முடியும் என்றும் கேள்வி.
*உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது நாளை விசாரணை.. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை சார்பில் மனு செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு.
*சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு விதிகளுக்கு உட்பட்டுதான் சலுகை வழங்கப்படுகிறது.. அதிமுக புகாருக்கு அமைச்சர் ரகுபதி விளக்கம்.
*இலங்கை கடற்படை கைது செய்து உள்ள மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
*மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம்.. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை.
*எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தது பற்றி பிரதமர் மோடி கடுமையான விமர்சனம்.. முஜாகிதீன் இந்தியா, பாபுலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற தீவிரவாத அமைப்புகளின் பெயரிலும் இந்தியா உள்ளதாக கருத்து.
*நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மோடி, நாங்கள் இந்தியா என்று ராகுல் காந்தி பதிலடி.. மணிப்பூரை குணப்படுத்த உதவுவோம் என்றும் டுவிட்டரில் பதிவு.
*மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்குமாறு 4-வது நாளாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.. நாடாளுமன்ற இரண்டு அவைகளும் முடக்கம்.
*இரண்டு மாதங்களுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்தில இணைய சேவை வசதி.. நிபந்தனைகளுடன் மாநில அரசு அனுமதி.
*சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தவ்பிக் என்பவர் விமான நிலையத்தில் கைது.. தீவிரவாத வழக்குகளிலும் தேடப்பட்டவர் சிக்கியதால் போலிஸ் தீவிர விசாரணை.
*தமிழ்நாட்டில் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ 250 வரை கூடியது.. ஒரு கிலோ அரிசி விலை ரூ 10 வரை அதிகரிப்பு.
*பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை அதிகரித்தது ஆவின் நிறுவனம்.. விலை உயர்வைக் கைவிடுமாறு பால் முகர்வோர் சங்கம் வலியுறுத்தல்.
*சிவகாசி அருகே மத்தாப்பூ தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து.. தொழிலாளர்கள் இருவா் மரணம்.
*தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 18- ஆம் தேதி மீனவர் அமைப்புகள் மாநாடு.. பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
*இந்திய ரயில்வேயின் டிக்கெட் பதிவுக்கான இணைய தளம் முடங்கியதால் முன் பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு.. ஆறு மணி நேரத்திற்குப் பிறகு செயல்படத் தொடங்கியதால் நிம்மதி.
*இந்த மண்ணில் வேரூன்றி உள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைத்தோங்க தங்கள் உழைப்பு பயன்பட்டும்.. பாமக நிறுவனர் ராமதாசின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
*சீனாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து கின் காங் நீக்கம்.. கடந்த ஒரு மாதமாக பொது வெளியில் தோன்றா கி்ன் காங்- ஐ நீக்கவிட்டு புதிய வெளியுறவு அமைச்சராக வாங் யீ நியமனம்.
*வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது..ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையல் தகவல்.
*நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 38 சென்டி மீட்டர் மழை கொட்டியது.. விடாது பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெருக்கு.
*கனமழை காரணமாக வால்பாறையில் அருவிகளில் தண்ணீ்ர் பெருக்கு.. ஆபத்தான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.