*திமுக பைல்ஸ்- 2 என்ற பெயரில் திமுக நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்களுக்கான ஆவணங்களை ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்ததால் பரபரப்பு.. ரூ 5600 கோடி மதிப்பிலான மூன்று ஊழலுக்கான ஆதாரங்களையும் வழங்கி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாக தகவல்.
*திமுகவினரின் ஊழலுக்கான ஆதாரங்கள் என்று கூறி 16 நிமிட வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை..போக்குவரத்துத் துறையில் மட்டும் ரூ 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புகார்.
*தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாக நேரலை செய்ய இயலாது.. உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் பதில்.
*நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் ஓம் பிர்லா.. முறைப்படி விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த முடிவு.
*பிரதமரை நாடாளுமன்றத்தில் பதிலளிக்கச் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் முயற்சி வெற்றி.. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது நடைபெறும் விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.
*மணிப்பூர் கலவரம் பற்றிய விவாதத்தையும் பிரதமர் பதிலையும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்.. நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி.
*கார்கில் போர் நினைவு தினம்.. போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி.
*திருச்சியில் திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பயிற்சிக் கூடத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.. வாக்குச் சாவடி முகவர்களுக்கு மூன்று முக்கியப் பணிகளை பட்டியலிட்டுப் பேச்சு
*கர்நாடகத்தில் கன மழை பெய்வதன் எதிரொலி.. காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
*புழல் சிறையிலிருந்து வீடியே கான்பரன்ஸ் மூலம் ஆஜர் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவல் மூன்றாவது முறையாக நீடிப்பு.. ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை சிறையிலிருக்க அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு.
*செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைப்பதற்கு எதிரான வழக்கு.. நாளை இரண்டு மணிக்கு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்.
*கடலூர் மாவட்டத்தில் மேல் வளையமா தேவி கிராமத்தில் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கியது என்.எல்.சி. நிர்வாகம்.. நெல் வயல்கள் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அழிக்கப்படுவதாக புகார்.
*என்.எல்.சி.நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்..விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. தலைமையில் போலிசார் குவிப்பு.
*நிலம் எடுப்பதை என்.எல்.சி. நிர்வாகம் கைவிடக் கோரி பேருந்துகள் மீது கல்வீச்சு.. நெய்வேலி- விருத்தாசலம் சாலையில் டயர்களைப் போட்டு தீ வைப்பு.
*தென்காசியில் இரு தினங்கள் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது மாவட்ட ஊராட்சி தலைவியுடன் வாக்குவாதம்.. மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனின் பதவியை பறித்து திமுக தலைமை நடவடிக்கை.
*ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன இயக்குநர் தீபக் ரூ 62 கோடி மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்..மோசடி பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல்.
*கலவரத்தால பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விரும்பிய நான் ஏற்பாடு செய்வதற்கு அனுப்பிய மநீம நிர்வாகி அருணாசலத்தை மணிப்பூருக்குள் அனுமதிக்கவிலலை”.. கமல் ஹாசன் தரப்பில் வீடியா வெளியீடு,
*மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றதைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்.. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
*சென்னை அருகே வள்ளுவர் குருகுலம் என்ற கல்வி நிறுவனத்திற்கு 1944 ல் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4 ஏக்கர் நிலத்தை தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு எடுத்துக்கெண்டது சரிதான்.. உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
*பனியமாத திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 5- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு