*நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது … அடுத்த இரண்டு நாட்கள் மனுக்கள் மீது பரீசிலனை செய்யப்பட்டு போதிய தரவுகளற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும்.. 30- ஆம் தேதி சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்
*சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் , கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடைசி நாளில் மனுத்தாக்கல் … மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நேற்றிரவு அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் சுதா டெல்லியில் இருந்து அவசரமாக மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்து கடைசி நேரத்தில் மனுத் தாக்கல் செய்து முடித்தார்.
*அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு … எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு கடிதம் எழுதி உறுதிப்படுத்தியது தேர்தல்ஆணயம்.
*தேர்தல் ஆணையத்தின் விதிகள் படி ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடாததால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு … மதிமுகவின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு.
*நாம் தமிழர் கட்சிக்கு ஒலி வாங்கி எனப்படும் மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம் .. சின்னத்துக்கு ஓட்டு இல்லை சீமானுக்குதான் ஓட்டு என்று சின்னத்தை அறிமுகம் செய்துவைத்து சீமான் பேச்சு..
*மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு… விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஆணையம் விளக்கம்.
*உதகமண்டலத்தில் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு அதிமுகவினர் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு தொண்டர்கள் மீதும் தடியடி … குறுக்கு வழிகளை திமுக அரசு பயன்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி புகார்.
*நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்., அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும். ₹10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்பது பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் …. மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நவடடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி.
*தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி 6.23 கோடி வாக்காளர்கள். இவர்களில் ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3.16 கோடி என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு பேட்டி … இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.
*தமிழகத்தல் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட இருக்கின்றனர் … 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் சத்ய பிரத சாகு பேட்டி.
*பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை… பெங்களூரு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியதாக கூறப்பட்டது குறித்து விசாரணை.
*இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 36 பேர் ஊர்க்காவற் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் 33 மீனவர்கள் விடுதலை … படகோட்டிகள் இரண்டு பேருக்கு தலா ஆறு மாதமும் இரண்டவாது முறையாக எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வந்த மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டைனயும் விதிப்பு.
*தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் … தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டில் தேடுதல் வேட்டை … மறைந்திருந்த மாவேயிஸ்டுகள் ஐந்து பேர் சுட்டுக் கொலை.
*டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு … பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரியது அமலாக்கத் துறை.
*கைது செய்யப்பட்டு காவலில் இருந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசை இயக்க முடியாது என்று அந்த மாநில துணை நிலஆளுநர் சக்சேனா … அமலாக்கத் துறைவிசாரணையில் இருக்கும் கெஜ்ரிவால்அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பது ண்டஎப்படி என்று விசாரணை நடத்த வேண்டும் என்ற பாஜக வலியுறுத்தல்.
*அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இந்திய அரசு உரிய சட்ட விதிகளை பின் பற்றவில்லை என்று அமெரிக்கா தெரிவித்த கருத்தால் சர்ச்சை … டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்.
*இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியி்ல் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை கங்கணா ரனாவத் பற்றி அவதூறான பதிவை போட்டதால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரிய சுணந்தே மற்றும் மம்தா பானர்ஜி பற்றி அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி திலிப் கோஷ் இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்… அவதூறு கருத்துகளுக்கு வெள்ளிக் கிழமை மாலை ஐந்து மணிக்குள் பதிலளிக்க உத்தரவு.
*இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பம் … கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனுத்தாக்கலுக்கான ஏற்பாடுகள் தயார்.
*கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மகள் வீணா மீது சட்ட விரோத பணப்பரிமாற்றத்தின் கீழ் அமலாக்கதுறை வழக்குப் பதிவு …வீனா நடத்தும் ஐ.டி. நிறுவனத்திற்கு கனிம வள நிறுவனம் ஒன்றில் இருந்து சட்ட விரோத மாக பணம் வந்த புகாரின் பேரில் நடவடிக்கை.மமெ
*அமெரிக்காவில் பால்டிமோர் பாலத்தில் சரக்கு கப்பல் மோதியதில் ஆறு பேர் இறப்பு … விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.
*ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேங்சர் திரைபடத்தின் ஜரகண்டிஎன்ற பாடல் வெளியீடு … ராம் சரன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான பாடல் வலைதளங்களில் வைரல்.
*சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது … தயாரிப்பு நிறுவனம் தகவல்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447