*தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக நோட்டீஸ்.. அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை நீக்க வேண்டும் என்று நோட்டீசில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்.

*அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா பதவியை அக்டோபர் வரை நீட்டிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.. செப்டம்பர் 15 வரை பதவியில் தொடருவதற்கு மட்டும் அனுமதி.

*உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான மேல் முறையீட்டு மனு மீது கபில் சிபல் மற்றும் துஷார் மேத்தா வாதம்..மீண்டும் ஆகஸ்டு 1- ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு.

*சென்னையில் மூன்று இடங்களில் சட்ட விரோதப் பணப் பறிமாற்றம் தொடா்பாக அமலாக்கத் துறை சோதனை.. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் உட்பட இருவரை அழைத்துச் சென்று விசாரணை.

*திருச்சியில் வேளாண் துறை சார்பில் 3 நாள் வேளாண் சங்கமம் கண்காட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

*சென்னையில் ஆகஸ்டு 4- ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பற்றி விவாதிக்க முடிவு.

*கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் என.எல்.சி. நிறுவனம் சார்பில் இரண்டாவது நாளாக நிலம் எடுப்புப் பணி.. எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை தடுக்க போலிஸ் குவிப்பு.

*விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு என்.எல்.சி. நிறுவனம் நிலம் எடுக்க வேண்டும்.. விவசாயிகளுக்கு எதிரான செயலுக்கு திமுக அரசு துணை நிற்பதாக எடப்பாடி புகார்.

*சுற்றுச் சூழலுக்கு எதிராக செயல்படும் என்.எல்.சி.நிறுவனம் தமிழ்நாட்டை வெளியேற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல்.. நெய்வேலியில் என்.எல்.சி.நிர்வாக அலுவலகம் முன்பு நாளை போராட்டம் நடத்த முடிவு.

*சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு.. 250 பக்க குற்றப்பத்திரிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்.

*மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக வரத்து உயர்வு.

*ஆளுநரிடம் வழங்கப்பட்ட பெட்டியில் ஆறு அமைச்சர்களின் பினாமி பற்றிய ஆதராங்கள் உள்ளன.. ஊழலுக்கு எதிரான போரட்டம் தொடரும் என்று அண்ணாமலை தகவல்.

*மதுராந்தகம் அருகே நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கைது.. வீட்டு மனைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ரூ 30 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரின் பேரில் நடவடிக்கை.

*பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தமிழில் கையெழுத்துப் போட வேண்டும்.. பள்ளிக் கல்விதுறை இயக்குநர் அறிவொளி உத்தரவு.

*மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வருகை திருப்திகரமாக இல்லை என்று புகார்.. 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.

*விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம்.. 14 -வது தவணையாக நிதி வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

*மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் தராமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டார் மோடி.. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே புகார்.

*மணிப்பூர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பு.. அமளி மூண்டதால் ஆறாவது நாளாக அலுவல்கள் முடக்கம்.

*மும்பை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கன மழை..பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

*பிரபல ஓவியர் மாருதி காலமானார்.. 86 வயதான மாருதி தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

*ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவிப்பு..காவலில் வைக்கப்பட்டு உள்ள அதிபரை விடுவிக்கக் கோரி ஆதரவாளர்கள் போராட்டம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *