*விவசாய நிலத்தை என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உட்பட 500 பேர் கைது.. என்.எல்.சி.அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தது போலிஸ். அனைவரும் மாலையில் விடுவிப்பு.
*நெய்வேலியில் பாமக தொண்டர்களுடன் போலிஸ் மோதல்.. தடியடி,கண்ணீர் புகைக் குண்டு வீச்சு,வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு.
*பாமக தொண்டர் ஒருவரை போலிஸ் சுற்றி வளைத்து தாக்கும் வீடியே வளைதளங்களில் வைரல்… நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் போலிஸ் குவிப்பு.
*என்.எல்.சி. நிறுவனம் நிலம் எடுப்பதை கைவிடும் வரை பாமக போராட்டம் தொடரும்.. மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு.
*நிலம் எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்களை அழிப்பதை ஏற்க முடியாது..நெய்வேலியில் புல்டோசர் மூலம் பயிர்கள் அழிக்கப்பட்டதைக் கண்டபோது அழுகை வந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை.
*ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு மகாராஜா போல வாழும் விவசாயி வேறு யாரிடமும் கையேந்தி வேலை செய்வதை விரும்ப மாட்டார்..நெய்வேலி நிலவரம் குறித்து ஆகஸ்டு 3- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு.
*கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தம் .. தமிழ்நாட்டின் பலவேறு இடங்களில் மறியலில் ஈடுப்பட்ட பாமகவினர் கைது.
*சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பார்வையாளர் மாடத்திற்கு கலைஞர் நூற்றாண்டு அரங்கம் என்று பெயர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று அரங்கத்தை திறந்து வைத்தார்.
*மணிப்பூர் விவகாரம் குறித்து தமது அறிக்கையை படிக்காமல் அவதூறு பரப்புகிறார் மு.க.ஸ்டாலின்.. தாம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஸ்டாலின் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
* அண்ணாமலையின் “என் மண்,என் மக்கள்” என்ற ஆறு மாத கால நடைபயணம் ஆரம்பம்.. ராமேஷ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
* நாட்டில் ஊழல் மிகுந்த அரசு திமுக அரசு தான் என்று அமித்ஷா குற்றச்சாட்டு… மீனவர்கள் பிரச்சனைக்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று புகார்…
*ராமேஷ்வரத்திற்கு அமித் ஷா வந்ததால் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.. மின்சாரம் தடை படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு.
*சென்னை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் 6 பேருக்கு இன்னோவா கார் கொடுப்பதற்கு எதிர்ப்பு.. மாநகராட்சிக் கூட்டத்தில் மண்டலக் குழுத் தலைவர்கள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக வாக்குவாதம்.
*குற்றஞ்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க சட்ட விதிகள் தடை செய்யவில்லை.. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வாதம்.
*ஆகம விதிகளும் பூஜை முறைகளும் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை இல்லை..சேலம் சுகவனேஷ்வரர் கோயில் வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
*சென்னையில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி மூலம் பிரதமர் பேச்சு.. வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் மோடி.
*மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கம் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. நாடளுமன்றம் 7- வது நாளாக முடங்கியது.
*உலகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தகவல்.. பூமியில் உள்ள 7 பெரிய பூனை இனங்களைக் காக்க ‘பிக் கேட்’ என்ற கூட்டணியை இந்தியா அறிமுகம் செய்து இருப்பதாக அறிவிப்பு.
*தெலுங்கான மாநிலத்தில் தொடந்து கனமழை.. வாரங்கல் உள்ளிட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு.
*கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு தொடருகிறது..மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
*மியான்மர் நாட்டில் இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆங் சன் சூ அகி வீட்டுக் காவலுக்கு மாற்றம்.. உலக நாடுகள் நிர்ப்பந்தத்தால் ராணுவ அரசு பணிந்தது.