தலைப்புச் செய்திகள் (28-08-2023)

*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் -1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2- ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளதை உறுதி செய்தது இஸ்ரோ… நான்கு மாதத்தில் இலக்கை சென்றடையும் என்றும் அறிவிப்பு.

*டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி ஆலோசனை … கர்நாடக மாநில அணைகளில் இருந்து வினாடிக்கு ஐந்து ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட உத்தரவு.

*மதுரையில் நின்று கொண்டிருந்த ரயில் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக லக்னோவில் ஐந்து பேர் கைது… மதுரை கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஐந்து பேரும் சிறையில் அடைப்பு.

*சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மூவாயிரம் பக்க குற்றப்பத்திரிகையின் நகல் ஒப்படைப்பு … மீண்டும் செப்டம்பர் 15- ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு.

*சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஜாமீனில் விடுதலை செய்யுமாறு செந்தில் பாலாஜி கோரிக்கை .. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தல்..

*சென்னை அடுத்த போரூரில் அமைக்கப்பட்டு உள்ள அமெரிக்காவின் யுனைட்டட் பார்சல் நிறுவனத்தின் தொழில் நுட்ப மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … நான் முதல்வன் திட்டத்தில் கீழ் தேர்வான மாணவர்களுக்கு யு.பி.எஸ். மையத்தில் பயிற்சி பெறுவதற்கான கடிதங்களும் முதல்வரால் அளிப்பு.

*சொத்துக்குவிப்பு வழக்கில் ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியலை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் … ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள்,செருப்புகள் மற்றும் கைக்கடிகாரங்கள் பட்டியலில் இல்லை என்று நீதிபதி பதில்.

*தமிழ்நாட்டில் தனி நபரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி .. இந்தியாவில் 2- வது பெரிய பொருாளாதாம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தகவல்.

*சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று அழைப்பதை மெட்ரோ நிர்வாகம் கைவிட்டு விட்டது .. எடப்பாடி பழனிசாமி புகார்.

*திரைப்பட நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் …மதுரையில் மீனாட்சி கோயிலில் வைத்து தாலி கட்டியவர் பின்னர் கைவிட்டுவிட்டதாக கண்ணீர்.

*சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கஞ்சா போதை சிறுவர்களால் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி அறிக்கை .. தமிழ் நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பது கவலை தருவதாக உள்ளது என்றும் கருத்து.

*இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம் … அவதூறு வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகததால் நடவடிக்கை.

*சென்னையில் வில்லிவாக்கம் அருகே புறநகர் ரயிலில் தீ விபத்து … உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.

*நடப்பு கல்வியாண்டில் ஆறு முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலண்டு ,அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்.. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப் போவதாக அறிவிப்பு.

*ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 2 – ஆம் தேதி வரையும் நான்கு முதல்12- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 2 – ஆம் தேதி வரையும் காலண்டு விடுமுறை … காலாண்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டது பள்ளிக் கல்விதுறை.

*சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனக்கு முன்னால் பள்ளம் இருந்ததால் பாதையை மாற்றி சமமான பாதையில் பயணம் … பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி ரோவரை கண்காணிக்கும் விஞ்ஞானிகள் தகவல்.

*மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் சோனியா காந்தியும் பங்கேற்க முடிவு.. பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தாம் பிரதமர் பதவி உட்பட வேறு எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை என்று விளக்கம்.

*திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த நான்காவது சிறுத்தையும் சிக்கியது … வனத்தறை கூண்டில் சிக்கிய சிறுத்தையை உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை.

*உத்திர பிரதேசத்தில் ஏழாம் வகுப்பு இசுலாமிய மாணவனை மற்ற மாணர்வர்களைக் கொண்டு தாக்கச் சொன்ன பள்ளிக்கூட ஆசிரியை விளக்கம் …”நான் தவறு செய்துவிட்டது உண்மைதான், ஆனால் அந்த தவறுக்கு சாதியோ மதமோ காரணமில்லை” என்று பேட்டி

*ஆப்கானிஸ்தான் பெணகள் வெளிநாடு சென்று படிப்பதற்கு அனுமதி இல்லை என்று தாலிபன் அரசு அறிவிப்பு ..தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்வதற்கு தடை விதித்து உத்தரவு.

*ஓணம் பண்டிகை நாளை கொண்டாட இருப்பதை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டது கேரளா மாநிலம் ..தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

*உலகத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் எனற பெருமையை பெற்ற நீராஜ் சோப்ராவுக்கு பிரதமர், தமிழக முதல்வர் உட்பட பலரும் பாராட்டு …ஈட்டி எறிதலில் கிடைத்த தங்கப் பதக்கம் வியர்வை, கடின உழைப்பு மற்றும் உறுதியால் செய்யப்பட்டது என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புகழாரம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *