*மக்களவை தேர்தல் மட்டுமில்லை இனி எந்த தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அதிமுக துணை பொதுச்செயளாலர் கே.பி.முனுசாமி பேச்சு… தமிழ்நாடு மக்களின் நலன், உரிமையை பாதுகாக்க நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாடுபடும் என்றும் உறுதி.
* சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி அண்ணாமலை ஆலோசனை… பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை.
*பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றச்சொல்ல, எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று ஓ.பி.எஸ் கேள்வி… பா.ஜ.க-விற்கு எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக விமர்சனம்.
*பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து தினமும் தங்களிடம் பேசி வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி….பாஜக மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் கருத்து.
* நாட்டின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை…டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
*பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்…. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைவராக பதவி வகித்தவர்.
*வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி… முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை….
*கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, நாளை கர்நாடகாவில் பந்த் அறிவிப்பு…. பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு.
*பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி நாளுக்குநாள் வலுவிழந்து வருவதாக மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேட்டி….நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் எந்த நிகழ்வுக்கு எதிராகவும் இதுவரை அதிமுக குரல் கொடுக்கவில்லை என்று விமர்சனம்.
*கர்நாடகாவில் நாளை ‘பந்த்’ நடைபெற உள்ள நிலையில் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும்… போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்.
*உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் இடம்…. காயம் காரணமாக அக்சர் படேல் விலகியதையடுத்து அஸ்வினுக்கு வாய்ப்பு.
*அச்சுறுத்தல், தொடர் அழுத்தத்தால் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார்… குருவந்தூர் மலை வழக்கில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு.
*பெங்களூருவில் சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோதே நடிகர் சித்தார்த்தை வெளியேற்றிய கன்னட அமைப்பினர்… காவிரி விவகாரத்தில் பந்த் நடப்பதால் செய்தியாளர் சந்திப்பு தேவையா என கேட்டு வெளியேற்றம்.