*கடந்த 2017-18 முதல் 2020-21 வருமான வரி மற்றும் அபராதம் ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்…. ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்த நடவடிக்கை..
*நிலுவையில் உள்ள ரூ.11 கோடி வருமான வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
*ரூ.1,700 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உத்தரவு.
*சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்…நோட்டீஸ் பெற்றவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் காரணங்களை கூறியுள்ளனர். வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி என்றோ சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்.
*கோவையில் ஆரத்தி எடுத்தவருக்கு மறைத்து வைத்து, அண்ணாமலை பணம் கொடுத்ததாக எடுக்கப்பட்ட வீடியோ வைரல்…காவல்துறை சரிபார்ப்புக்காக வீடியோ அனுப்பப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்.
*தமிழ்நாட்டில் வேட்பு மனுக்கள் மீதான பரீசீலனை முடிந்தது… வேட்பாளர் இறுதிப்பட்டியல் நாளை வெளியாகிறது
*தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பொது மற்றும் தனியார் துறைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கும் வாக்குப் பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை… தேர்தல் ஆணையம் உத்தரவு.
*கோவையில் பிரதமரின் பேரணிக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க, சாய்பாபா காலனி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*ககனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்…சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
*அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை…முழு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சோதனைக்கு பின் ஜெயங்கொண்டம் புறப்பட்டுச் சென்றார்.
*ஏப்ரல் 12ம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்.
*பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது…..ராஷ்டிர ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டி.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447