*கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு குடோன் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிழிப்பு.. மேலும் பலர் காயம்.
*குடியிருப்புப் பகுதியில் பட்டாசு குடோனுக்கு அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி..மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் விசாரணை.
*கல்வியாளர்களை ஆலோசிக்காமல் உயர் கல்வித் துறையில் பொதுப்பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி புகார்.. பல்கலைக் கழக மானியக் குழு வழங்கும் தன்னாட்சி தகுதியை இழக்க நேரிடும் என்று கருத்து.
*நெய்வேலி அருகே வளையமாதேவி கிராமத்தில் நெல் வயலில் இயந்திரங்கள் மூலம் கால்வாய் தோண்டும் பணியை மீண்டும் தொடங்கியது என்.எல்.சி.. விவசாயிகள் எதிர்ப்பை சமாளிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு.
*என்.எல்.சி.க்கு எதிராக பாமக நேற்று நடத்திய போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீது வழக்கு.. சட்ட விரோதமாக கூடியது, வன்முறையை தூண்டியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
*நெய்வேலியில் பாமக போராட்டத்திற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால் அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம்.. காவல் துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
*விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிலக்கரி சுரங்க விரிவாக்கத்தை கைவிட வேண்டும்..மத்திய-மாநில அரசுகளுக்கு கமலஹாசன் வேண்டுகோள்.
*அரசியல் எதிரிகளை சலவை செய்யும் எந்திரமாக அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது பாஜக.. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கருத்து.
*ராமேஷ்வரம் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபாடு.. ஆழ் கடல் போன்று மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று வருகைப் பதிவேட்டில் குறிப்பு.
*சிறையில் உள்ள குற்றவாளிக்கு அமைச்சர் பதவி தந்து அழகுப் பார்க்கும் அக்கிரமம் தமிழகத்தில் மட்டுமே நடைபெறும்..நடை பயணத்தின் இடையே அண்ணாமலை பேட்டி.
*கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளரும் பாஜக பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரியை அவதூறு வழக்கில் கைது செய்தது பெரம்பூர் போலிஸ்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கிக் கொடுத்து மணிப்பூர் அனுப்பலாம் என்று பேசியதால் நடவடிக்கை.
*தமிழ்நாட்டில் புலிகள் எண்ணிக்கை 306 ஆக அதிகரிப்பு.. கடந்த நான்கு ஆண்டுகளில் 42 புலிகள் எண்ணிக்கை கூடியிருப்பதாக கணக்கெடுப்புக்குப் பின் அறிவிப்பு.
*திறமைக்குப் பதிலாக மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது இளைஞர்களை அவமதிக்கும் செயல்..பிரதமர் மோடி கருத்து.
*மணிப்பூர் சென்றனர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 21 பேர்.. கலவரத்தால் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து கருத்துக் கேட்பு.
*கலவரம் குறித்த விசாரணையை மணிப்பூரில் தொடங்கியது சி.பி.ஜ.. ஆடைகளை களைந்து பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றக் காட்சியை வீடியோ எடுத்தது தொடர்பாக வழக்குப் பதிவு.
*கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இறப்பு.. அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி விபத்து.
*வாரிசுகள் இல்லாத ஆண்கள் இறந்தால் வாரிசு சான்றிதழ் யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்..தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*தமிழ்நாடு பாட நூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி மாநில காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகிகள் மனு… முதலமைச்சர் ரங்கசாமியை அவமதித்துப் பேசியதாகப் புகார்.
*சேலத்தில் இருந்து பெங்களூா் மற்றும் கொச்சிக்கு விரைவில் விமான சேவை.. ஐதராபாத்துக்கும் விமான சேவை ஆரம்பமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தகவல்.
*ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.சி.எல்.வி.- சி 56 ராக்கெட்.. பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரவு.
*தமிழ்நாட்டில் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டது.. சில்லறை வணிகக் கடைகளில் ஒரு கிலோ ரூ 170 வரை விற்பனை.
*ராஜஸ்தான் மாநிலத்தில் கன மழை..ஜெய்ப்பூர் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.