*வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது .. டிசம்பர் 2 ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் தகவல்.
*தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் .. சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு,விழுப்புரம் மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும்.
*தெலுங்கானா மாநிலத்தில் 117 சட்டப் பேரை தொகுதிகளுக்கும் நாளை ஓரே கட்டமாக வாக்குப்பதிவு .. பலத்து பாதுகாப்புடன் தேர்தலை நடத்தி முடிக்க ஏற்பாடு.
*தமிழ்நாடு அமைச்சர்கள் நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதின்றம் உத்தரவு .. கடந்த 1996 முதல் 2001 ஆட்சியில் சொத்துக் குவித்ததாக அதிமுக ஆடசியில் தொடர்ந்த வழக்கில் தீா்ப்பு.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை.. மேலும் 14 நாட்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளதாக விளக்கம்.
*சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருதக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு .. சனாதன சர்ச்சை பற்றி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தல்.
*பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் சாதி, தொலை பேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கேட்பதை உடனடியாக கைவிட வேண்டும் … எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலைக் கல்லூரியின் புதிய கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் …. சின்னமலை பெயரை சொல்லும் போது எழுச்சி ஏற்படுவதாக பேச்சு.
*சீனாவில் பரவியதாக கூறப்படும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் இலலை என்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சு.பேட்டி… மழைக்கால நோய்களான டெங்கு,மலேரியாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதி.
*வேலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 227 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.. கன்னியா குமரி மாவட்டத்தில் 27 பேர் பாதிப்பு.
*கோட நாடு கொலை,கொள்ளை வழக்குத் தொடர்பாக செல்போன்களை ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு … வழக்கில் குற்றவாளிகளாக சேகரிக்கப்பட்ட பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோர் செல்போன்களை ஆய்வு செய்தது சி.பி.சி.ஐ.டி.
*இயக்குநர் அமீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா … பேட்டிகள் மூலம் அமீர் தெரிவித்த கருத்துகள் தம்மை காயப்படுத்தியதாகவும் வேதனை.
*பருத்தி வீரன் படத்தின் போது எழுந்த பிரச்சினை தொடர்பாக அமீர் – ஞானவேல் ராஜா இடையே கடந்த இரண்டு வாரங்களாக காரசாரமான வாதங்கள் நடைபெற்றது .. இயக்குநர்கள் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.
*யூ டியூப் சேனலை முடக்குவதுக் குறித்து டிடிஎப் வாசன் டிசம்பர் 13 ஆம் தேதி ஆஜராக வேண்டும் .. காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவு.
*கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இரண்டாவது நாளாக விசாரணை.. கொள்ளைக் காரன் பொள்ளாச்சிக்கு தப்பிச் சென்று இருப்பது சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிப்பு.
*நிலுவையில் மசோதாக்களை வைத்திருப்பது பற்றி கேரளா முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்துப் பேசுங்கள் …ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு உச்சநீதிமன்றம அறிவுறுத்தல்.
*உத்தரகாண்ட் மாநில சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உடன் பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக கலந்துரையாடல் .. பத்திரமாக மீட்க உதவியதற்காக தொழிலாளர்கள் நன்றி.
*சுரங்கத்தில் சிக்கிய முதல் ஐந்தாறு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக மன உறுதியை ஏற்படுத்திக் கொண்டதாக மீட்கப்பட்ட தொழிலாளி தகவல்.
*தொழிலாளர்கள் சிக்கி இருந்த சுரங்கம் அருகே உள்ள கோயிலில் ஆஸிதிரேலிய மீட்பு நிபுணர் அர்ணால்டு டிக் வழிபாடு .. தங்களுக்கு கிரிகெட்டும் தெரியும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கவும் தெரியும் என்று பேட்டி.
*ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து சென்ற விமானத்தில் கணவன் –மனைவி இடையே கடுமையான சண்டை .. இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்.
*இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் அவரது குழுவினர் அனைவரின் பதவிக்காலமும் நீட்டிப்பு .. இந்திய கிரிக்கெட்ட வாரிய கூட்டத்தில் முடிவு.
*சென்னையில் நடைபெற உள்ள பார்முலா கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது என்று தமிழக அரசு உறுதி … கார் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி தருவதற்காக பெறப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
*தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக சென்னை சுற்றி உள்ள அணைகள் நிரம்புகிறது .. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் அடையாறில் திறப்பு.