தலைப்புச் செய்திகள் (31-07-2023)

*மே 4-ஆம் தேதி பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக 18- ஆம் தேதி வரை வழக்குப் பதியாமல் என்ன செய்தது மணிப்பூர் மாநில அரசு? உச்சநீதின்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேள்வி.

*மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடந்த வழக்கு மீது உச்சநீதிமன்றம் விசாரணை.. அனவைருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து.

*நாடாளுமன்றத்தில் எட்டாவது நாளாக மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி.. இரண்டு அவைகளும் நாள் முழுவதும் முடக்கம்.

*கிருஷ்ணகிரியில் ஒன்பது பேரை பலி கொண்ட விபத்து, சிலிண்டர் வெடிப்பால் நடந்திருக்க முடியாது.. பட்டாசு ஆலையே காரணமாக இருக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் புரி பதில்.

*கிருஷ்ணகிரி விபத்துக் குறித்து விசாரணை நடத்த வருவாய் துறை அதிகாரி பவணந்தியை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு.. விபத்து நடந்த இடத்தில் ஆய்வை ஆரம்பித்தார் பவணந்தி.

*தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக உசத்தில் தக்காளி விலை.. சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 220 வரை விற்பனை.

*என்.எல்.சி.நிறுவனம் கைப்பற்றிய நிலத்தை அறுவடையை முடித்துக் கொண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்..வளையமாதேவி கிராமத்து விவசாயிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*சேதப்படுத்தப்பட்ட விவசாயப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.. வழக்கை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை.

*என்.எல்.சி.நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.அருண்மொழித் தேவன் போராட்டம். . காவல் துறை அனுமதி கிடைக்காததால் அலுவலகத்திலேயே உண்ணாவிரதம்.

*பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ளது திமுக அரசு… எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

*இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ஒன்பது கிலோ தங்கத்தை கைப்பற்றியது சுங்கத்துறை.. தனுஷ்கோடி அருகே நான்கு பேரை கைது செய்து படகையும் பறிமுதல் செய்து விசாரணை.

*சென்னை அருகே ரூ 1600 கோடி மதிப்பீட்டில் மின்னணு உற்பத்தி ஆலை அமைக்கிறது பாக்ஸ்கான்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.

*பழனி முருகன் கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற விளம்பரத்தை அகற்றப்பட்ட இடத்திலேயே வைக்க வேண்டும்..தேவையற்ற சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம் என்று அறநிலையத்துறையிடம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

*கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் வருமானத்துறை சோதனைக்கு வந்த அதிகாரியை தாக்கிய வழக்கு.. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரில் ல் 15 பேர் நீதிமன்றத்தில் சரண்.

*தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும் கார்கள் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்தில் சிக்கும் வேதனை தொடருகிறது.. மதுரை அருகே மையிட்டான்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில் நான்கு பேர் இறப்பு.

*தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தை அதிகரிக்க முழுமூச்சாக செயல்படுகிறார் மது விலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி. குடிகாரர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுதான் அரசின் லட்சியமா என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

*கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.. அனைத்து பத்திரப் பதிவு அலுலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.

*திருநெல்வேலி – சென்னை இடையே ஆகஸ்டு 6- ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்.

*ஆஸ்கர் விருது பெற்ற பழங்குடியின தம்பதிகளை சந்திக்க முதுமலை செல்ல குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு முடிவு.. யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்டு 5-ஆம் தேதி வரை தடை.

*மும்பை- ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் ரயில்வே போலிஸ்காரர் வெறித்தனம்..துப்பாக்கியால் சுட்டதில் துணை ஆய்வாளர் மற்றும் மூன்று பயணிகள் இறப்பு.

*பாகி்ஸ்தானில் கைபர் பகதூன் மாகணத்தில் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் நடந்த தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு.. குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவன் பற்றி விசாரணை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *