*முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை….பன்னீரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் பதில் அளிக்க உத்தரவு

*தமிழ் நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல செயல்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் கருத்து … லஞ்ச ஒழிப்புத் துறை தோற்று விக்கப்பட்ட நோக்கமே தோல்வி அடைந்து விட்டதாக புகார்.

*லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் .. முக்கியமாக வழக்குள் கேலிக் கூத்தாக்கப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.

*முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கும் பரிந்துரையை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு.. ரவி எழுப்பி இருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்

*பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் திட்டத்தை ஏளனம் செய்து தினமலர் நாளேடு வெளியிட்டு உள்ள செய்திக்கு முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் … நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? என்று கேள்வி

*சேலத்தில் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் பத்திரிகையை எரித்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் … காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டதற்கு கண்டனம்.

*தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 12- ஆம் தேதி வரை நாள் தோறும் வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்யவேண்டும் .. கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

*சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றாக இணைப்பதற்கு நடவடிக்கை.. வரைவு திட்டத்தை ரயி்ல்வே வாரியத்திற்கு அனுப்பி வைத்தது தெற்கு ரயில்வே.

* தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது ….பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு

*மு.க.ஸ்டாலின் ‘Speaking for India’ என்ற தலைப்பில் பாஜக ஆட்சி குறித்தும் பன்முகத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும் தினமும் பேசப்போவதாக அறிவிப்பு … ஸ்டாலின் பேசுவதை ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் திட்டம்.

*செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் குழப்பம் நீடிப்பு… தாங்கள் மனு செய்யவேண்டிய நீதிமன்றத்தை தெரிவிக்குமாறு அமைச்சர் தரப்பு உயர்நீதிமன்றத்தில தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு உத்தரவு.

*தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் 18ஆம் தேதிக்கு மாற்றம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*திருச்சி,சேலம் மற்றும் நெல்லையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ஆய்வு முடிந்தது …சாத்தியக் கூறு அறிக்கையை தமிழ அரசிடம் கொடுத்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.

*இந்தியாவில் இருந்து 100 கோடி டாலர் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பட்டு அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது … இரண்டு நாளேடுகளில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்.

*அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணம் யாருடையது என்று ராகுல் காந்தி கேள்வி.. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தல்.

*நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 18 –ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் என்று அறிவிப்பு.. எதிர்க்கட்சிகள் அவை சுமூகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்

*ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் அக்கா ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் சந்திப்பு..தெலுங்கானா சட்டசபை தேர்திலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட முடிவு என தகவல்.

*நிலவின் தெற்கு பகுதியில் சல்பர் என்ற கனிமம் இருபபதை ரோவரின் மேலும் ஒரு கருவியும் உறுதி செய்தது.. சல்பர் நிலவுக்கு எப்படி வந்தது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.

*நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையாக பார்த்து ரோவர் பயணம் செய்வதை படம் பிடித்து அனுப்பியது விக்ரம் லேண்டர்.. தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ரோவரை லேண்டர் படம்பிடித்து அனுப்பியதை குழந்தையை தாய் கவனிப்பதுடன் ஒப்பிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி.

*காஷ்மீருக்கு மீண்டு்ம் மாநிலத் தகுதி கொடுப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது …உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

*தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ் பர்க்கில் ஐந்து மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து .. 75 பேர் இறந்துவிட்ட பரிதாபம்.

*ஆப்பிரிக்காவில் கோபன் என்ற சின்னஞ்சிறு நாட்டில் அதிபர் அலி போங்கேவை அகற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு பொதுமக்கள் ஆதரவு … அப்பா பிறகு மகன் என்று அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தது மட்டுமின்றி ஊழல் ஆட்சியை தந்ததாலும் வெறுப்பு

*தென் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை .. சிவங்கங்கை மாவட்டம் திருபுவனத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *