*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி.
*இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது.
*கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த் கடந்த 1979 ஆம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.. தொடர்ந்த 150 படங்களில் நடித்து தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனாக விளங்கிய பெருமை உண்டு,
*நூறாவது படமான கேப்டன் பிராபகரன் படத்தில் நடித்த பிறகு விஜயகாந்த் ரசிகர்களால் கேப்டன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.. புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்தையும் விஜயகாந்த் பெற்றிருந்தார்.


*கடந்த 2005-ல் தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் .. 2011 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை வென்ற விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
*ஆர்.சுந்தரராஜன் இயக்கிய அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் ஆகிய இரு படங்களும் விஜயகாந்தை தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது.. ஊமை விழிகள், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், ரமனா போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்த படங்கள் ஆகும்.
*விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தமிழ் படப்பிடிப்புகள் ரத்து .. பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு.
*சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கதுறை அதிகரிகள் சோதனை. கொளத்தூர் சிவ பார்வதி நகரில் முத்து என்பவர் வீட்டில், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் கணேஷ் என்பவர் வீட்டில், பெசன்ட் நகரில் தொழிலதிபர் ரவி ராம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்.
கன்னட ரக்‌ஷ வேதனா என்ற அமைப்பின் தலைவர் நராயணா கவுடா உட்பட 20 பேர் கைது … பெங்களூரில் ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகைகளை நேற்று உடைத்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை.
*ஆங்கில பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகள் பற்றி முதலமைச்சர் சித்தராமய்யா பெங்களூரில் அதிகாரிகள் உடன் ஆலோசனை .. அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி.
*தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தாம் மீண்டும் முதலமைச்சர் ஆகி விடக்கூடும் என்ற நம்பிக்கையில் கே.சந்திரசேகர ராவ் 21 லேண்ட் குரூசர் கார்களை வாங்கி விஜயவாடாவில் மறைத்து வைத்திருந்தார்.. பதவி ஏற்பு விழாவிற்கு அணி வகுத்து வருவதற்கு அவர் வாங்கிய 22 கார்களும் அரசாங்கத்தின் சொத்து என்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி புகார்.
*காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெயர், நில மோசடி வழக்குத் தொடர்பான குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறையால் சேர்ப்பு.. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அரியானா மாநிலத்தில் நில வாங்கியதற்கான பணப்பரிவர்த்தனையில மோசடி நடந்திருக்கிறது என்பது வழக்காகும்.
*கத்தார் நாட்டில் உளவுப் பார்த்ததாகக் கூறி எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்ட்ட மரண தண்டனை ரத்து.. எட்டு பேரின் மரணத் தண்டனை சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டதாக தகவல்.
*இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற உள்ள நிலையில் எங்கள் நண்பருக்கு வெற்றிக் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடிக்கு ரஷ்யா அதிபர் புட்டின் வாழ்த்து .. மாஸ்கோ சென்று உள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசிய புடின், ரஷ்யாவுக்கு வருமாறு மோடிக்கு அழைப்பு.
*மாஸ்கோவில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் நடத்திய நிர்வாண விருந்தில் பிரபலங்கள் பங்கேற்ற வீடியோ வலை தளங்களில் பரவியதால் சர்ச்சை .. உக்ரைன் நாட்டுடன் ரஷ்ய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்துப் போரிடும் போது நிர்வாண விருந்து நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடர பலரும் வலியுறுத்தல்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *