ஜுன், 12.. பரபரப்பாக எதையாவது கொளுத்திப் போடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிதாக ஒன்றை தீ வைத்து வீசி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதில்தான் அந்த தீப்பந்தம் உள்ளது..
பேட்டி வருமாறு…
ஒரு பூத் தலைவரும் கூட பாஜகவின் ஒரு உயர்ந்த பொறுப்பிற்கும் செல்ல முடியும் என்று அமித்ஷா கூறியுள்ளார். 1982- ல் அமித்ஷா குஜராத் மாநிலத்தில் பூத் கமிட்டித் தலைவராக இருந்தார். இதை வைத்துதான் பாஜகவில் மட்டும் தான் ஒரு சாதாரண தொண்டனும் கூட எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என்று அமித் ஷா பேசினார். தமிழ் நாட்டை் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜக தலைவராக பதவி வகித்து உள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் நான்கு நாட்களாக அவசரப்பட்டு கொண்டிருக்கிறார்.மு.க ஸ்டாலினுக்கு மாற்றாக கட்சியில் கனிமொழி வளர்ந்து கொண்டிருக்கிறார். திமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஸ்டாலின் மீது அதிருப்தி உள்ளது. எனவே அவர்கள் கனிமொழி பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
3 -ஜி என்று அமித்ஷா சொன்னது மூன்று தலைமுறை குடும்பம் என்பதை குறிக்கும். முதல்வர் ஸ்டாலினுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன், கோபாலபுரத்தில் பிறக்காத ஒருவர் உங்கள் கட்சியில் தலைவராக முடியுமா? திமுக ஆட்சியில் புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது திமுக தான்.அனைத்து மாவட்டங்களிலும் குறுநில மன்னர்களை உருவாக்கியுள்ளனர்.
கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்தால் ஸ்டாலினால் முதல்வராக இருந்திருக்க முடியுமா? கருணாநிதி மகன் என்பதை விட ஸ்டாலினுக்கு வேறு என்ன தகுதி உள்ளது? கருணாநிதி எனும் பெயரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். இதற்க்காக அவர் வெட்கப் படவேண்டும்.
டி ஆர் பாலுவை ஏன் மறுமுறை (2009) கேபினட் மந்திரியாக மன்மோகன் சிங் ஆக்கவில்லை ? நிதி அமைச்சரையும் பால் வளத்துறை அமைச்சரையும் ஏன் மாற்றினீர்கள் என்று சொல்ல இயலுமா ? ஒன்பது ஆண்டுகளில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் யாராவது ஒரு குண்டூசியை திருடினார்கள் என்று சொல்ல முடியாது. எங்கள் மீது புகார்கள் எதுவும் இல்லாததால்தான் திமுகவினருக்கு வயிறு எரிகிறது.
இவ்வாறு அண்ணாமலை பேட்டியில் கூறி உள்ளார். ..