திருநங்கைகளுக்கு குரல் கொடுக்கும் பாத்திரத்தில் சுஷ்மிதா சென்.

ஆகஸ்டு, 01-

கடந்த 1994 ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக( மிஸ் யுனிவர்ஸ்) தேர்வு செய்யப்பட்டவர் சுஷ்மிதா சென்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயை போல் , சுஷ்மிதாவை தேடியும் சினிமா வாய்ப்பு வந்தது. ’தஸ்தக்’ என்ற இந்திப்படம் மூலம் நடிகையானார்.

தமிழில் ‘ரட்சகன்’ படத்தில், நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அற்புதமான பாடல்கள் இடம் பெற்றிருந்தும், அந்தப்படம் ஓடவில்லை. பின்னர் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்திப் படங்களில் கொஞ்சகாலம் பிஸியாக இருந்தார்.

47 வயது நிரம்பிய அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இதனால், படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு வெப்தொடர்களில் நடிக்கிறார்.

தற்போது ‘தாலி’ என்ற வெப்தொடரில் திருநங்கை கேரக்டரில் நடித்துள்ள சுஷ்மிதா சென், தனது சமூக வலைத்தளத்தில் டீசரை வெளியிட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஸ்ரீகவுரி சாவந்த் திருநங்கைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர். அவர்களின் உரிமைகளுக்காக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தொடரில் தான் ஸ்ரீகவுரி சாவந்தாக சுஷ்மிதா சென் நடிக்கிறார்.

படத்தைத் தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கி உள்ளார். இந்தப் படம், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் .15-ம் தேதி வெளியாகிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *