தொடர் விடுமுறையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசன டோக்கன் பெற ஏராளமானோர்
நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக திருமலையில் ஏழுமலையானை தரிசன செய்ய திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் உள்ள இலவச தரிசனம் டோக்கன் அளிக்கும் மூன்று இடங்களிலும் அதிகாலையிலிருந்து மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச்செல்கின்றனர்.
டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலையில் இருக்கும், வைகுண்டம் வளாகத்தில் இருக்கும் கம்பார்ட்மெண்டுகளில் சாமி தரிசனத்துக்கு சுமார் 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வ தரிசனம் டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 6 மணி நேரம் ஆகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரம் ஆகும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் குடிநீர், அன்ன பிரசாதம் போன்றவற்றை அவ்வப்போது வழங்கி வருகிறது.