ஆகஸ்டு,20 –
திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள சேஷாசலம் காட்டுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள் உலா வருகின்றன. அவை அடிக்கடி அலிபிரி மலைப்பாதைக்குள் நுழைந்து வெங்கடேசபெருமானை தரிசிக்க செல்லும் பக்தர்களை அச்சுறுத்துகிறது.
சில தினங்களுக்கு முன் மலைப்பாதை மார்க்கமாக பெற்றோருடன் சாமி கும்பிட சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றது.இதனால் திருப்பதி கோயில் நிர்வாகம் மலைஏறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கி வருகிறது.மலைஏறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சிறுத்தைளை பிடிக்க ஸ்ரீசைலத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள் குழு திருமலைக்கு சென்றுள்ளது. சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிகும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். .
இந்நிலையில் திருமலையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாடுவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஸ்ரீவாரி மெட்டு வழித்தடத்தில் பொருத்தப்பட்டிருந்த ட்ராப் கேமராவில் சிறுத்தைப்புலி காணப்பட்டது. சிறப்பு வகை குடிசைகள் அருகே கரடிகள் நடமாடுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
000