June 04, 2023
நேற்று ஒரே நாளில் கோவில் உண்டியலில் நான்கு கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு நேரடியாக வந்த பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் 36 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். 300 ரூபாய் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் 5 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கான டோக்கன் வாங்கிய பக்தர்கள் சுமார் ஆறு மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையான் வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று ஒரே நாளில் 85 ஆயிரத்து 366 பக்தர்கள் சுவாமி கும்பிட்டு கோவில் உண்டியலில் நான்கு கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.