இந்தி திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை இலியானா கர்ப்பமானதாக வெளியான செய்தி வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆவது இயற்கை தானே, இதில் என்ன விவாதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தான் விவாதமே.
இலியானா டி குரூஸ் என்ற இவர் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது வயது 36. கடந்த 2006 ஆம் ஆண்டில் தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமானர். பிறகு இந்தி,தெலுங்குப் படங்களில் தொடாச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்றார்.
சமூக வலைதளப் பக்கங்களில் அவர் சில படங்களை பகிர்ந்து உள்ளார். முதல் புகைப்படத்தில் டி ஷர்ட் ஒன்றின் படம் இடம் பெற்று இருக்கிறது. அதில் எழுதப்பட்டு உள்ள வாசகம் ‘சாகசம் தொடங்குகிறது’ என்பதுதான். அடுத்த படத்தில் ஒரு செயினும் அதில் ஒரு டாலரும் உள்ளது. அந்த டாலரில் அம்மாவை குறிக்கும் ‘மம்மா’ என்ற சொல் இருக்கிறது. அந்த டாலரின் கீழ் ‘மிக சீக்கிரமாக உங்களை சந்திக்கவேண்டும்..ரொம்ப நாள் காத்திருக்க முடியாது.. இப்படிக்கு டார்லிங்க்’ என்று நடிகை எழுதி இருக்கிறார்.
இலியானா பூடகமாக வெளியிட்டு உள்ள இந்தக் கருத்துகளைப் பார்த்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார், குழந்தைக்கு தாயாகப் போகிறார் என்று வலைதளங்களில் கருத்து வெளியிட்டு உள்ளனர். விரைவாக தாயாகப் போகும் இலியானாவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்..
இலியானா சில வருடங்களுக்கு முன்பு ஆண்ட்ரு நீபோன் என்ற புகைப்படக் காரரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. அவர் ஆஸ்திரேலியா நாட்டவர். அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகக் கூட தகவல்கள் பரவியது. அது நடைபெறாமல் போனது.
இதன் பிறகு நடிகை கத்ரினா கைப் பின் சகோதரர் லாரன்ஸ் மைக்கேலுடன் பழகினார். இருவரும் ஒன்றாக சுற்றினார்கள்.
இப்போது நடிகை கர்ப்பச் செய்தி வெளியாகி இருக்கிறது. அது உண்மையானால் அந்தக் குழந்தைக்கு அப்பா யாராக இருக்கும் என்று சிலர் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.