கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான’ நிலா பெண்ணே ‘என்ற தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. அவர் நடித்த முதலும் கடைசியுமான தமிழ் திரைப்படம் இதுவே.முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மகன், வி.தமிழழகன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
கடந்த 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், நிலா பெண்ணே படத்துக்கு பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.
தெலுங்கில் வெங்கடேஷ், சிரஞ்சீவி, மோகன்பாபு ஆகியோருடன் நடித்துள்ளார். இந்தியிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள திவ்ய பாரதி, 1992ஆம் ஆண்டில் மட்டும் 2 தெலுங்கு படங்கள், மற்றும் 10 இந்தி படங்கள் என மொத்தம் 12 படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஆண்டுக்கு 5 படங்களில் நடிப்பதே ஆபூர்வம். திவ்யபாரதியோ, ஒரே ஆண்டில் 12 படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.
14 வயதில் மாடலிங் செய்தார். நிலா பெண்ணே படத்தில் அறிமுகம் ஆனபோது அவரது வயது- 16. மொத்தமாக இவர் நடித்த படங்கள் 22.
1993 ஆம் ஆண்டு, ஏப்ரல் ஐந்தாம் தேதி , தனது வீட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.
மிதுன்சக்ரவர்த்தி -திவ்யபாரதி நடித்த , சாட்ரஞ்ச் என்ற படம் 1993ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. இதுதான் திவ்யபாதி நடிப்பில் வெளியான கடைசி படம்.
திவ்யபாரதி ,இறந்த பிறகு, அவர் பாதியில் விட்டுச்சென்ற படங்களில், ரம்பா, கஜோல், மனிஷா கொய்ராலா, தபு, மம்தா குல்கர்னி, உள்ளிட்ட நடிகைகள் நடித்தனர்.
—-