டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்த விவகாரத்தில் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் அவரது அண்ணன் மற்றும் கிளை மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரபல துணிக்கடையான ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ஆடை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 25ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்தயி தீவிர விசாரணையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் வைத்தது அதே கடையில் சுத்தம் செய்யும் பணியார் விக்னேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக செல்போனில் இருந்த மெமரி கார்டை அதே கடையில் பெண் ஊழியராக பணி செய்த விக்னேஷின் தங்கை உதயா என்பவர் எடுத்து வைத்து இருந்ததும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் பல நாட்களாக உடைமாற்றும் அறையில் செல்போன் கேமராவை வைத்து படம் பிடித்தது தெரியவந்தது. இவர்கள் செல்போன் வைத்து உடை மாற்றுவதை கேமாராவில் படம் பிடிந்து வந்தது குறித்து, இந்த கடையின் மேலாளர் ஏழுமலைக்கும் தெரியுமாம். காவல்துறை விசாரணையில் இது அம்மலமான நிலையில், விக்னேஷ் மற்றும் அவரின் தங்கை உதயா ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களுக்கு உடந்தையாக இருந்த, கிளை மேலாளர் ஏழுமலை மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கிளை மேலாளரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து மீதமுள்ள அண்ணன் விக்னேஷ் தங்கை உதய ஆகியோரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.