‘வேட்டையன்’ படத்தை அடுத்து ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, நம்ம ஊர் சத்யராஜ் , ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அண்மையில் ,மனைவி லதாவுடன் துபாய் சென்ற ரஜினி, தங்கள் 44 –வது திருமண நாளை அங்கு கொண்டாடினர்.
இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே, தமிழில் இப்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன்’ , சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.