இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்,ஆளும் பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை கிட்டத்தட்ட முழுதாக வகுத்து முடித்து விட்டது.
டெல்லியில் மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் அவரது இல்லத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், இணை பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது.பாட்னாவில் 17 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் குறித்து மோடி கேட்டறிந்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோற்றது குறித்து மோடி கவலை தெரிவித்துள்ளார்.‘கர்நாடகத்தில் நாம் ஜெயிக்காவிட்டாலும், 90 இடங்களாவது கிடைக்கும் என நீங்கள் அனைவரும் சொன்னீர்கள்.ஆனால் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம்.கர்நாடகத்தில் நடந்த தவறுகள், விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என மோடி அறிவுறுத்தினார்.
இப்போது பா.ஜ.க.வின் கோட்டையாக திகழும் வட மாநிலங்களில். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தென் மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னகத்தில் உள்ள 6 மாநிலங்களில் மொத்தம் 130 தொகுதிகள் உள்ளன. தமிழ்நாடு – 39, கேரளா -20,தெலுங்கானா – 17, ஆந்திரா -25, கர்நாடகம் -28 மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி.இந்த 130 இடங்களில் 80 முதல் 95 தொகுதிகளில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் ஆசை சரி, ஆனால் நிறைவேறுமா?
000