மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்திலிருந்து – திருப்பதிக்கு வந்தய பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ரயிலில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்பதற்காக புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கும் மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பிஆர்எஸ் கட்சி ஆட்சிக்கு வந்த கடந்த 14 மாதங்களில் பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு 4 முறை வருகை தந்திருக்கிறார். அந்த 4 முறையும் பிரதமர் மோடியை புறக்கணித்த சந்திரசேகர் ராவ், ஐந்தாவது முறையாக இன்றும் பிரதமரை வரவேற்பதற்கோ, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கோ செல்லவில்லை.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “தெலங்கானா மக்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களில், எந்த இடையூறும் மாநில அரசு ஏற்படுத்தக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை அளிக்கிறது. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை தடுக்க வேண்டாம் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.