நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அரசியல் கட்சிகள் அதனை சந்திக்க தயாராகி வருகின்றன.
ஆளும் பாரதீய ஜனதா கட்சி தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
தெலங்கானா மாநில பாஜக தலைவராக கிஷண் ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளர். செகந்திபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மோடி அமைச்சரவையி்ல் சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கிறார்.
ஆந்திர மாநில பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் என்.டி.ராமராவின் மகள் ஆவார். அந்த வகையில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் உறவினர்.
ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் பதவி முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டிக்கு கிடைத்து இருக்கிறது. பஞ்சாப் மாநிலத் தலைவராக சுனில் ஜாக்கரை நியமித்தும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டு உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் கட்சியின் மூத்த தலைவர்கள் உ டன் நீண்ட ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலும் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
000