விக்ரம்-2 படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். அந்தப்படத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. தற்போது நடிக்கும் இந்தியன் -2  படத்துக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் ’ப்ராஜெக்ட்-கே’ படத்தில் வில்லன் வேடத்தில் கமல் நடிக்கிறார். 30 நாள் கால்ஷீட் டுக்கு, 150 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் பணத்தை பதுக்கி வைக்காமல் அள்ளி வீசுகிறார், விக்ரம் -2 வெற்றிக்கு காரணமான அதன் டைரக்டர் லோகேஷ் கனகராஜுக்கு விலைஉயர்ந்த காரை பரிசாக அளித்தார்.

’இந்தியன் – 2’ படத்தை பார்த்து மெச்சிய கமல், அதன் இயக்குநர் ஷங்கருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசாக வழங்கினார். கோவையை சேர்ந்த பேருந்து பெண் ஓட்டுநருக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

தேவர் மகன் படம் உருவாக்கத்தில் கமலுக்கு வலதுகரமாக இருந்தவர் வில்லன் நடிகர் சங்கிலி முருகன். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார்.உதவி கேட்டு தனது உதவியாளர் மூலம் கமலுக்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை படித்த கமல் நொடிப்பொழுதும் யோசிக்காமல்  20 லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி, உதவியாளரிடம் கொடுத்து சங்கிலி முருகனிடம் கொடுக்ச் சொல்லிவிட்டு மறு வேலை பாா்த்து உள்ளார்.

கமலுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *