செப்டம்பர்,11-
களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டசம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய். அவரைப்போல் இன்று உச்ச நடிகர்களாக ஜொலிப்போர்,அதைக்காட்டிலும் கொஞ்சம்அதிகம் வாங்கி இருப்பார்கள். இப்போது அந்த நட்சத்திரங்களின் ஊதியம் நூறு கோடிb ரூபாயில் ஆரம்பிக்கிறது.
படம் ஓடினால்,ஆட்டோக்காரர்களுக்கு பயணிகள் தருவது போல் , தயாரிப்பாளர்கள் ‘போட்டு ‘கொடுப்பார்கள். பெரிய பட்ஜெட் படங்களின் பாதிச்செலவு, நடிகர்களுக்கான சம்பளத்தில் போய் விடுகிறது. நிஜ நிலவரம் இப்படி இருக்க, நடிகர் சங்க கூட்டத்தை நடத்தசங்கத்தில் துட்டு இல்லை என தகவல்
வெளியாகியுள்ளது.இது ஹேஸ்யம் அல்ல. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலே சொல்லி இருக்கும் ஹாஸ்யம்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடமபேசிய விஷால் இதனை தெரிவித்தார்.
’நடிகர் சங்கத் தேர்தல் நடந்த பின்னர் கரோனா வந்துவிட்டது-கிட்டத்தட்ட 3 வருடத்துக்குப் பின்னர், கட்டிடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டது- எனவே, வங்கிக்கடன் பெற்று, சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ளஇருக்கிறோம்" என்று குறிப்பிட்ட விஷால், அழாக்குறையாக இதையும் சொன்னார்;
’’உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சங்கத்தில் நிதி இல்லை. இன்றைக்கு இந்த பொதுக்குழுவை நடத்துவதற்கே, ஒவ்வொருவரிடமும், நிதி உதவி
பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்’’ என்று சோகமாக சொல்லி முடித்தார். கங்கையிலேயே தண்ணீர் இல்லையாம், நம்புங்க!
000