ஜனவரி-17.
மும்பையில் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாந்த்ராவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில்12- வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இருபது தனிப்படைகளை அமைத்து மும்பை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் சந்தேகத்திற்கு உரிய நபர் ஒருவனை பிடித்துச் சென்றுள்ளான். அவனுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் தரப்பில் இன்னும் வெளியிடவில்லை. சயீப் அலிகான் வீட்டில் இருந்து தப்பிய அவன் ஆடைகளை மாற்றிக் கொண்டு பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு சென்று உள்ளான்.
பல் வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ்காரர்கள் அவரை பிடித்து பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அடுக்கு மாடி குடியிருப்பில் தனது மனைவியும் நடிகையுமான கரீனா கபூருடன் அவர் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் வீட்டு வரந்தாவில் இருவரிடையே வாக்குவாதம் நடப்பதை காதில் வாங்கியதால் அறையை விட்டு வெளியில் வந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவன் வீட்டுகார வேலைக்கார பெண்ணுடன் வாக்குவாதம் செய்து உள்ளான். அருகில் சென்று விசாரித்த நடிகர் சயீப் அலிகானை ஆறு இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டான்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சயீப் அலிகானை குடும்பத்தினர் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் அவர் அபாயக் கட்டத்தை தாண்டி உள்ளார்.
வீட்டுக்குள் புகுந்த நபர் கொள்ளை அடிப்பதற்கு வந்திருக்கலா
ம் என்று கருதப்படுகிறது. வீட்டு வேலைக் காரப் பெண் அவனுக்கு ஏன் கதவை திறந்துவிட்டார் என்றும் விசாரிக்கப்ப்டு வருகிறது.
சயீப் அலிகான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்து உள்ளன.
*