ஜனவரி -19.
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பிஜோய் தாஸ் என்ற போலிப் பெயரில் வசித்து வந்த வங்கதேச நாட்டவரான ஷரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பவர் மும்பையில் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டைய பரபரப்படையச் செய்த இந்த வழக்கை விசாரித்த மும்பை போலீசார், சாய்ஃப் அலி கான், அவரது மனைவி கரீனா கபூர் கான், மகன்கள் வசிக்கும் பாந்த்ராவில் உள்ள கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதை கவனித்தனர். பின்னர் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க நகரம் முழுவதும் பல கேமிராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்தனர். இதில கொள்ளையனின் உருவம் தெரியவந்தது.
அதே நேரத்தில், உள்ளூர் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், வோர்லியில் உள்ள கோலிவாடாவில் வாடகை வீடு ஒன்று பற்றி போலீசாரருக்கு தெரியவந்தது. அங்கு குற்றம் சாட்டப்பட்டவர், மேலும் மூன்று பேருடன் வசித்து வந்த தகவல் கிடைத்தது. ஒரு போலீஸ் குழு இந்த தங்குமிடத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் விசாரித்தது. சந்தேக நபரின் பெயர் மற்றும் தொடர்புடைய தகவல்களை அவர்களுக்கு கிடைத்தன. போலீசார் அவரது தொலைபேசி எண்ணையும் பெற்று, அதைப் பயன்படுத்தி அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்காணித்தனர்.
தானேயில் வெறிச்சோடிய சாலையில் ஒரு புதரில் குற்றம் சாட்டப்பட்டவர் மறைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
ஷரிபுல், இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை .ஆனால் அவர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்த வங்கதேச நாட்டவர் என்பதை நிறுவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அவர்,நடிகர் சயீப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிய பிறகு தொலைக்காட்சி செய்திகளில் தனது படங்களைப் பார்த்ததாகவும் அதன் பின்னர் தானேவுக்கு ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் கூறினார். ஷரிப்புல் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு தானேயில் உள்ள ஒரு தொழிலாளர் முகாமுக்கு அருகில் ஒளிந்து கொண்டார். அவரது தொலைபேசி கடைசியாக காட்டிய இடத்தை போலீசார் கண்டுபிடித்து தானேவை அடைந்தனர். அங்கு கைது செய்து அவரை மும்பை கொண்டுவந்தனர்.
தான் திருட நுழைந்த வீடு நடிகர் சைஃப் அலி கானின் வீடு என்பது தனக்குத் தெரியாது என்று ஷரிபுல் கூறியதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், அவர் வேலையில்லாமல் இருந்ததாகவும், பெரிய தொகைக்காக நடிகரின் வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
கட்டிடத்திற்குள் நுழைய பின்புற படிக்கட்டு மற்றும் ஏர் கண்டிஷனிங் குழாய்களைப் பயன்படுத்தியதாக ஷரிப்புல் போலீசாரிடம் கூறியுள்ளார். அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.அவரை சயீப் அலிகான் வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்று வீட்டுக்குள் நுழைந்த காட்சியை செய்து காட்டுமாறு சொல்லுமாறு போலீசர் முடிவு செய்திருக்கின்றனர்.
இதற்கிடையில், வியாழக்கிழமை அதிகாலை ஆறு கத்திக்குத்து காயங்களுடன் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் சயீப் அலிகான் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
*