நடிகர் மாதவனுக்கு மத்திய அரசு பதவி.

செப்டம்பர்,02-

நடிகர் மாதவன், தனது கலை உலக பயணத்தை இந்தி தொலைக்காட்சிகள் வாயிலாக ஆரம்பித்தார்.சில தொடர்களில் நடித்தார்.பிறகு இந்தி சினிமாவில் நடித்தார். அவரை இயக்குநர் மணிரத்னம், தனது அலைபாயுதே படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார்.இந்த படம் அவருக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாய் அமைந்தது.

அதன் பின் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தார். கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதஎழுத்து, மின்னலே. அன்பே சிவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மாதவன் இயக்கி நடித்த ’ராக்கெட்டெரி -நம்பி எபெக்ட்’ படத்துக்கு மத்திய அரசின் சிறந்த விருது அண்மையில் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு, மத்திய அரசு மேலும் ஒரு பரிசை வழங்கியுள்ளது.

புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இத்துறையின் அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூர், நடிகர் மாதவன் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அனுராக் தாக்கூர் இது குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் இந்த நிறுவனத்துக்கு பயன்படும் என்பதை உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு நடிகர் மாதவன் தனது பதிவில், ’உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எனது சிறப்பான உழைப்பை கொடுப்பேன்’ என உறுதியளித்துள்ளார்.

பல மணிரத்னங்களை,உருவாக்க மாதவனுக்கு வாய்ப்பு.ஜமாயுங்க.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *