சினிமாவும் , கிசு கிசுக்களும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்.சந்தை மதிப்பு மிக்க நட்சத்திரங்கள் குறித்து கிசு கிசு வருவது வாடிக்கையான விஷயம்.திருமணத்தை பற்றிய செய்திகளில்தான்’பிரபல நடிகர்- நடிகைகள்அடிக்கடி சிக்குவார்கள்.

‘’ அந்த நடிகையுடன் திருமணமா? இல்லவே இல்லை’ என ஆரம்பத்தில் ஆணித்தரமாக மறுப்பார்கள். ஒருநாள் உண்மையாகி விடும்,

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் பயணிக்கும் விஷாலை பற்றி ஊடகங்களில் கடந்த பத்து ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.லேட்டஸ்டாக நடிகை லட்சுமி மேனனுடன் இணைத்து திருமண வதந்தி..

இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வந்த விஷால், ’கண் -காது.மூக்கு’ வைத்து கல்யாண வதந்தி பரவுவதால் எரிச்சல் அடைந்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், இந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“என்னை பற்றி வரும் வதந்திகளை நான் எப்போதும் கண்டு கொள்வதில்லை. சிரிப்புடன் கடந்து சென்று விடுவேன். ஆனால் லட்சு மி மேனன் நடிகை என்பதையும் தாண்டி ஒரு பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற தவறான செய்திகள் ஓரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.

என் திருமணம் என்பது கால நேரம் கூடி வரும் போது கண்டிப்பாக நடக்கும். என் திருமணத்தை முறைப்படி அனைவரிடமும் அறிவித்துவிட்டு தான் செய்து கொள்வேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்” என. பதிவிட்டு, கல்யாண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், விஷால்.

விஷால் விளக்கத்தை நம்புவோம்.

-பாரதி

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *