பெங்களூருவில் அண்மையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகை ராஷ்மிகா மந்தனா, கலந்துகொள்ளவில்லை.
கன்னட சினிமா மூலம் திரைஉலக பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா, விழாவில் பங்கேற்காதது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா, மேடையில் வெளிப்படையாகவே பேசினார்.
‘ராஷ்மிகா மந்தனா தனது சினிமா வாழ்க்கையை, ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார் – பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளுமாறு அவரை அழைத்தபோது மறுத்துவிட்டார்.
`என் வீடு ஐதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியாது -எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது’ என்று அவர் கூறிவிட்டார்
எனக்குத் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்,பத்து முறை அவரது வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார்
தன்னுடைய சினிமா வாழ்க்கையை இங்கு தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை ராஷ்மிகா புறக்கணித்துவிட்டார். அதற்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?’ என்று விளாசி தள்ளினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,கோடவா தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் , ‘சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் ராஷ்மிகா மந்தனா அச்சுறுத்தப்படுகிறார்- கோடவா பழங்குடியினத்தை சேர்ந்த அவரை அச்சுறுத்துவது, எங்களது சமூகத்தையே அச்சுறுத்துவது போன்றது
எனவே ரஷ்மிகாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயங்களெல்லாம் ராஷ்மிகாவுக்கு தெரியுமா என தெரியவில்லை.
—