செப்டம்பர்,08-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக சினிமாவில் இருந்தார். கதை- வசனங்கள் எழுதினார். பாரதிராஜா உள்ளிடோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பஞ்சாலங்குறிச்சி என்ற படம் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.
அந்த கால கட்டத்தில், நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.கல்யாணம் செய்து சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் பரபரப்பு ரகம்.சினிமா ட்விட்ஸ்களை தாண்டியவிஷயங்கள் அதில் இருந்தன.
இது ஒரு சாம்பிள்.
‘ ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னை திருமணம் செய்தார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதால், நான் யாரிடமும் கூறவில்லை. அடுத்தடுத்து 7 முறை கர்ப்பமானேன். எனது அனுமதி
இல்லாமல், அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார்.’என்பது விஜயலட்சுமியின் பிரதான குற்றச்சாட்டு.
சீமான் மீதான புகார் தொடர்பாக அண்ணா நகர் காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான தனிப்படை போலீஸார், சில தினங்களுக்கு முன்னர் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்., சுமார் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஊட்டி சென்ற தனிப்படை போலீசார் அங்கு தங்கி இருந்த சீமானிடம், ‘ விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என சம்மன் கொடுத்தனர்.சென்னைக்கு வந்தபின் சம்மனை பெற்றுக்கொள்வதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பெரும் திருப்பமாக நடிகை விஜயலட்சுமியை போலீஸார் , சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.
‘சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்-. இதன் உண்மைத் தன்மைக்காக தற்போது மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது’’ என போலீசார் கூறினர்.
விஜயலட்சுமி விவகாரம் கிளைமாக்சை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகையிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள், இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும்.
’செந்தமிழன்’ சுலபமாக விடுபட முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டிருகிறார், என்பது மட்டும் உண்மை.
000