ஆகஸ்டு,31-
நம்முடைய செல்போனில் நாம் பேசுவது, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், மெயில்கள் அனைத்தையும் இந்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில ஏடு செய்தியாக வெளியிட்டு உள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீகியர், காக்னிட். செப்டியான் ஆகிய நிறுவனங்கள் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து கொடுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றில் முக்கியமான தகவல்கள் மட்டு்ம் அரசுக்கு அனுப்பப்படுகின்றன என்று அந்த செய்தியில் பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட பெகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் இந்திய அரசு ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகை நிருபர்கள்,தொழில் அதிபர்கள் ஆகியோரின் போன்களை அந்த சாப்ட்வேர் மூலம் ஒட்டுக் கேட்பதகாவும் அப்போது தகவல் வெளியானது. ஆனால் அரசு இதை திட்டவட்டமாக மறுத்தது.
இப்போது எழுந்து உள்ள புகாருக்கு பாஜக அரசு இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
000