நயன்தாராவுக்கு புதிய சிக்கல். மிரட்டும் சந்திரமுகி.

ஜனவரி-07,
மலையாளத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் நுழைந்து , உச்சநிலையை எட்டியது முதலே’ லேடி சூப்பர்ஸ்டார்’ ‘நயன்தாராவுக்கு, பல்வேறு பிரச்சினைகள்.

ஆவணப்படத்தை எடுத்து அவர் சந்திக்கும் சோதனைகள் தொடர்கதையாக நீள்கிறது.

அவருக்கும்,டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 – ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனை ஆவணப்படமாக தயாரித்தார்.

‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற பெயரில் இந்த ஆவணப் படம் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியானது. இதில் நடிகர் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் பாடல் காட்சி இடம்பெற்றது.

தனது அனுமதியில்லாமல், பாடல் காட்சி இடம்பெற்றதாக நயன் மீது நடிகர் தனுஷ், வழக்கு தொடுத்தார். இதற்காக ரூ.10 கோடியை அவர் நயன்தாராவிடம் கேட்டுள்ளார்.

அதே ஆவணப் படத்தில் இடம் பெற்ற ‘சந்திரமுகி’ பட காட்சிகள் நயனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது
.
அந்த ஆவணப்படத்தில், ‘சந்திரமுகி’ படத்தில் நயன்தாரா நடித்த சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ‘சந்திரமுகி’ படத்தை சிவாஜியின் சொந்த நிறுவனம் தயாரித்து இருந்தது. அவர்கள் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் நயன்தாராவுக்கு ஏற்படவில்லை.

ஆனால் ‘சந்திரமுகி’ படத்தின் முழு உரிமையும் தற்போது ஏபி பிலிம்சிடம் உள்ளது. சிவாஜி நிறுவனத்திடம் இருந்து ஏபி பிலிம்ஸ் உரிமைகளை பெற்றுக்கொண்டது.

அந்நிறுவனம், தங்களிடம் அனுமதி பெறாமல் சந்திரமுகி காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இதனால் நயன்தாரா தங்களுக்கு ரூ.5 கோடியை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
என்ன செய்யப் போறீங்க நயன்தாரா?

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *