மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா என்ற இடத்தில் தனியார் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 32 பேர் பயணித்துள்ளனர்; அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற கருகி உடல்களை மீட்டனர்.சில உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டன. காயம் அடைந்தவர்கள் சிலரின் நிலமையும் கவலைக்கிடமாக உள்ளது,
புல்தானா என்ற இடத்தில் இருந்து புனே நோக்கிச் சென்ற கொண்டிருந்து இந்த தனியார் பேருந்தை திருப்பம் ஒன்றில் ஓட்டுநர் திருப்பி உள்ளார். அப்போது முன் பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்து பள்ளம் ஒன்றில் சிக்கிக்கொண்டது. உடனே தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் கதவை திறந்து கீழே குதிக்க முயன்று உள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவிவிட்டது.
புல்தானா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசோனா, விபத்துக் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்து உள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருக்கிறார்.
000