செப்டம்பர்,20-
மணி ரத்னம், திரை உலகில் நுழைந்த, ஆரம்ப காலத்தில் கொடுத்த சினிமாக்கள் பெரிதாக பேசப்படவில்லை , ’மவுனராகம்’ திரைப்படம் அவரை , ஓரளவுக்கு வெளி உலகுக்கு அடையா ளம் காட்டியது. நகர்ப்புறங்களி ல் அவரை தெரிந்து கொண்டார்கள். கடந்த 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தான், மணி ரத்னத்தை தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது.
மும்பையை கதைக்களமாக கொண்டு, மணி ரத்னம் உருவாக்கி இருந்த இந்த படத்தில் வேலு நாயக்கராக கமல் வாழ்ந்து காட்டி இருந்தார். நாசர்,ஜனகராஜ், டெ ல்லி கணேஷ், நி ழல்கள் ரவி , சரண்யா , கார்த்திகா உள்ளிட்ட நட்சத்திர கூட்டமும் படத்தில் இருந்தது. இந்தப்படத்தை முக்தா சீனிவாசன் தான்
ஆரம்பத்தில் தயாரித்தார். செலவு எகிறியதால், படத்தை பாதியி லேயே நிறுத்தி விடும் சூழலுக்கு வந்து விட்டார்.இதனால் மணி ரத்னத்தின் அண்ணன் ஜீவியும், இந்த படத்தில் , தன்னை ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொண்டார். படமும் வளர்ந்தது. இளையரா ஜாவின் இசை படத்தின் தூணாக விளங்கியது.அவர் பாடிய‘தென் பாண்டி சீமையிலே ‘பாடல் அந்த காலத்தில் கமல் ரசிகர்களுக்கு தேசிய கீதமாக திகழ்ந்தது. ஹாலிவுட் படமான ‘காட்பா தர்’ படத்தின் ’ஜெராக்ஸ்’ என சொல்லப்பட்டா லும், சக்கைபோடு போட்டது, நாயகன். தமிழகத்தில் இருந்து
மும்பைக்கு பிழைப்புக்காக சென்று, தமிழர்களை ரட்சித்த வரதராஜ முதலியாரின் கதை என்றும் சொல்வார்கள். அது, ஓரளவு உண்மைதான். இந்தப்படத்துக்காககமல்ஹா னுக்கு சி றந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணி ஆகியோரும் தேசிய விருது பெற்றனர். ஆஸ்கர் விருதுக்கும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது.
உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாளை யொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் மாதம் 3-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கமல் ரசிகர்களுக்கு, இந்த ஆண்டு, ரெண்டு தீபாவளி !
000