ஆகஸ்டு,09-
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் ராகுல் காந்தி பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்கள் மோடி, மோடி என்று குரல் கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினார்ள் ராகுல்,ராகுல் என்று குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி பேச்சு வருமாறு..
“நான் இன்று அதானி பற்றி பேச மாட்டேன், மணிப்பூர் பற்றியே பேசப்போகிறேன்.எனவே பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் பயப்பட வேண்டாம். பிரதமா் மோடி சொன்னது போன்று இதயத்தில் இருந்து பேசப்படும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
நாட்டின் ஒரு முனையில இருந்து இன்னொரு முனைக்கு 130 நாட்கள் நடை பயணம் மேற்கொண்டு மக்களின் இதயங்களை அறிந்து இருக்கிறேன்.நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்.
யாத்திரையின் போதும் அதன் பிறகும் நிறைய பேர் நான் எதற்காக யாத்திரை சென்றேன் என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் சொன்ன பதில் இந்தியாவை அறிந்து கொள்வதற்காக என்பது ஆகும். உண்மையா இந்தியாவை எனது பயணத்தின் போது பார்த்தேன். என்னுடை யாத்திரை இன்னும் முடிவடையவில்லை
நான் நம்பும் கொள்கைக்காக உயிரை விடுவதற்கு தயாராக இருக்கிறேன், பிரதமர் விரும்பினால் சிறை செல்லவும் தயாராக உள்ளேன்.கடந்த பத்து ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறேன்.
நாட்டில் விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளதை நடைபயணத்தின் போது உணர்ந்தேன். அவர்களின் வலியை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
வன்முறையால் பாதிக்கப்பட்டு உள்ள மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை. ஏன் என்றால் அவர் அந்த மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. பிரதமரை நான் கேட்டுக் கொள்வது மணிப்பூரை இந்தியாவில் இருந்து பிரித்து விட வேண்டாம் என்பதுதான்.
நான் மணிப்பூர் சென்று இருந்தேன். அங்கு ஒரு பெண் தன் கண் முன்னே மகனை கொன்று விட்டதாக சொன்னார். மகனை இழந்துவிட்டபின் அனைத்து உடமைகளையும் விட்டுவிட்டு வீடடை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள் இந்தியா மீது நடத்தப்படும் படுகொலை ஆகும். அந்த மாநிலத்தை இந்தியா கொன்றுவிட்டது.
மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வந்துவிடலாம்.ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார்.நீங்கள் மக்கள் பேச்சை கேட்கவில்லை”.
ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு அதிகமாக இருந்தால் அவர் முழுமையாக பேசவில்லை.
இதன் பிறகு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி,” காங்கிரஸ் தேசத்தை விட்டு வெளியறே வேண்டும். பராத தாயை கொன்று விட்டார்கள் என்று ராகுல் காந்தி சொன்னதை காங்கிரஸ் உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றது கண்டிக்கத் தக்கது, காங்கிரஸ் தேசத்தை விட்டு வெளியறே வேண்டும். நாட்டுக்கு ஊழலை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான்”என்றார்.
000