நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்

June 8, 23

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர், சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதாக கூறினார். முதற்கட்டமாக மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், மொத்த வாக்குச்சாவடி எண்ணிக்கையில் 135 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என கூறினார். பழுதான வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மாற்று எந்திரங்கள் வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இந்த பணிகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார். மேலும் ஆகஸ்டு மாத இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறினர்.

இதனிடையே, அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், காலியாக உள்ள வயநாடு தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களை சரிபார்க்கும் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு பின் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *