May 19,2023
சுதா மூர்த்தி லண்டன் விமான நிலையத்தில், “ நான் தான் உங்க பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் தொடர்பான நினைவுகளை தி கபில் ஷர்மா ஷோவில் பகிர்ந்து கொண்டார். சுதா மூர்த்தி லண்டன் விமான நிலையத்தில், “ நான் தான் உங்க பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் தொடர்பான நினைவுகளை தி கபில் ஷர்மா ஷோவில் பகிர்ந்து கொண்டார்.
மிகவும் பிரபலமான நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாரயண மூர்த்தியின் மனைவி தான் சுதா மூர்த்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் அக்ஷதா மூர்த்தியின் பெயர் சமீபகாலமாக அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஆம் அக்ஷதா மூர்த்தி தான் பிரிட்டன் பிரதமரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக்கின் மனைவி. பிரிட்டன் அதிபராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரிட்டன் அதிபராக பதவி ஏற்றதிலிருந்து அக்ஷதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர் அடிக்கடி செய்திகளின் வருவதுண்டு.
சமீபத்தில் சுதா மூர்த்தி ஹிந்தி தொலைக்காட்சியில் தி கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பல சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசினார். மேலும் அவர் மனதுக்கு நெருக்கமான சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது ஒருமுறை தான் லண்டனுக்கு சென்ற போது விமான நிலையத்தில், “ நான் தான் உங்கள் பிரதமரின் மாமியார்” என கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறினார்.
அதாவது, ஒருமுறை லண்டன் சென்ற போது இமிகிரேஷன் அதிகாரி லண்டனில் தனது இமிகிரேஷன் முகவரியை கேட்டு, படிவத்தில் எழுத கூறியதாக குறிப்பிட்டார். அவருடன் மூத்த சகோதரி உடன் இருந்ததாகவும் கூறினார். ”நான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடான ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மகனும் லண்டனில் தான் வசிக்கிறார், ஆனால் மகன் வீட்டின் முழு முகவரி எனக்கு நினைவில் இல்லை. வேறு வழி இல்லாமல் நான் இறுதியாக 10 டவுனிங் ஸ்ட்ரீட் என எழுதினேன்” என்றார்.
அதை பார்த்த இமிகிரேஷன் அதிகாரி, என்ன ஜோக் பன்றீங்களா என கேட்டதாகவும் தெரிவித்தார். அப்போது வேறு வழி இல்லாமல் தான் அக்ஷதா மூர்த்தியின் தாய் என்றும், பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்றும் தெரிவித்துள்ளார். ”72 வயதான நான், பிரிட்டன் அதிபரின் மாமியார் என்பதை யாரும் நம்பவில்லை, இது ஒரு சுவாரசியமான சம்பவம்” என கூறி அதனை பற்றி பகிர்ந்து கொண்டார். சுதா மூர்த்திக்கு சமீபத்தில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் அவருடைய சமூக சேவை பணிகளை பாராட்டி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.