இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரைவில் அது 3-வது இடத்தை எட்டிப் பிடிப்பது உறுதி என்றும் அவர் கூறியுள்ளர்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்த்தில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று உரையாற்றினார். அப்போது அவர் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் புதிய அத்தியாயம் பிறந்திருப்பதாக தெரிவித்தார். வேறுபாடுகளைக் களைந்து நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகிறது என்றார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணவேண்டும் என்று வலியுறுத்திய மோடி, அது ஐரோப்பிய அளவில் திரும்பிவிட்டதாகவும் கருத்துக் கூறினார்.
இந்தியாவில் சிறுபான்மையிருக்கு எதிராக எந்தப் பாரபட்சமும் காட்டப்படவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சு 79- முறை கைத்தட்டல்களைப் பெற்றது. இரு அவை எம்.பி.க்களும் 15 முறை எழுந்து நின்று தங்கள் ஆதரவை மோடிக்கு உறுதிப்படுத்தினார்கள். பேசி முடித்த பிறகு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மோடியிடம் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்டோ கிராபில் கையெழுத்து வாங்கினார்கள்.
பிரதமர் மோடியின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாஷிங்டனில் இந்தியா-அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவுக்கு எம்.கியூ. வகை டிரோன்களை வாங்குவதும் குறித்தும் முடிவு செய்யப்பட்டது.நாட்டின் எல்லையை கண்காணிக்க இது பயன்படும்.
எப் 414 ஜெட் இன்ஜின்கள் கொண்ட விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் ஒப்பந்தம்.
இந்தியாவில் இப்போது சென்னை,டெல்லி,மும்பை,கொல்கத்தா,ஐதராபாத் ஆகிய 5 இடங்களில் அமெரிக்கவ தூ தரகங்கள் உள்ளன.புதிதாக பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் துணைத் தூ தரங்களை திறக்கவும் முடிவாகி உள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து 2024 ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுது போன்ற திட்டங்களை மேற்கொள்ளும்.
அமெரிக்காவில் உள்ள மைக்ரான் தொழில் நுட்ப நிறுவனம் இந்தியாவின் உதவியுடன் குஜராத் மாநிலத்தில் ரூ 22 ஆயிரம் கோடியில் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலையைத் தொடங்கும்.
5 ஜி மற்றும் 6 ஜி தொலைத் தொடர்பு சேவையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது போன்றவை மோடியின் பயணத்தில் குறிபிடத்தக்க அம்சமாகும்.
000