ஜுலை, 14- சந்திராயன்- 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்து உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.-3 எம்- 4 எனப்படும் ராக்கெட் சந்திராயன்- 3 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணுக்குச் சென்றது. இதையடுத்து அதை குறிப்பிட்ட நீள வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
சந்திராயன்- 3 ஏவப்படுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று மதியமே கவுண்டவுன் தொடங்கப்பட்டு இருந்தது. இன்று ஏவப்படட் இந்த விண்கலத்தை மேலும் மேலும் உயர்த்துவதன் மூலம் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து நழுவி நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றுவிடும். அதன் பிறகு அதன் சுற்றுப்பாதை கொஞ்சம்,கொஞ்சமாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகில் கொண்டு செல்லப்படும். பின்னர் சந்திராயன் – 3 நிலவில் தரையிறக்கப்படும். குறிப்பாக ஆகஸ்டு மாதம் 23 அல்லது 24 – ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இ்ஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்ப்பார்க்கிறார்கள்..
நிலவின் வடப் பகுதியை விட தென் பகுதியில் அதிகமான கனிம வளங்கள் இருக்கிறது. ஆனால் தென் பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவது மிகவும் கடினமான பணியாகும். இதனால்தான் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வடபகுதியில் தங்கள் விண்கலத்தை தரையிறக்குகின்றன.
இந்திய விஞ்ஞானிகள் ஒரு சாதனை முயற்சியாக நிலவின் தென் பகுதியில் சந்திராயன் விண்கலத்தை தறையிறக்க உள்ளனர். அதன் பிறகு அதில் உள்ள ரோவர் என்ற கருவி ஆய்வை மேற்கொள்ளும். இந்த ரோவர் கருவி 15 நாட்களுக்கு மட்டுமே செயல்படும ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தென் துருவத்தில் சோடியம், மெக்னீசியம், அலுமினியம், டைட்டானியம், இரும்பு பேன்ற தாதுக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை இது ஆய்வு செய்யும். அதே போன்று ஹீலியம் என்ற தாதுவும் தென் பகுதியில் அதிகம் இருக்கிறது. இவற்றை கவனத்தில் கொண்டுதான் சந்திராயன் 3 விண்கலததை நிலவின் தென்பகுதி நோக்கி இ்ஸ்ரோ செலுத்தி இருக்கிறது.
இந்த நடவடிக்கையில் வெற்றி கிடைத்து விட்டால் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும். இதனால் ரஷ்யா, லூனா- 25 என்ற விண்கலத்தை நிலவின் தென் பகுதிக்கு விரைவில் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இதற்கு முன்பு இ்ஸ்ரோ கடந்த 2008- ஆம் ஆண்டு சந்திராயன்-1 என்ற விண்கலத்தை முதன் முதலாக அனுப்பியது. அது வெற்றிகரமாக தரையிறங்கி நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை படம் எடுத்து அனுப்பியது. இதனால் சந்திராயன்- 1 முழு வெற்றியாக கருதப்படுகிறது.
அதன் பிறகு 2019- ஆம் ஆண்டு சந்திராயன்-2 எனற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது, நிலவை வெற்றிகரமாக நெருங்கிய அந்த விண்கலம் கடைசி நிமிடங்களில் கூடுதல் வேகத்தில் செயல்பட்டு நிலவில் மோதி நொறுங்கிப் போனது.
இதனால் அதில் இருந்த குறைகளை சரி செய்து இன்னுன் கவனத்துடன் சந்திராயன் 3- ஐ உருவாக்கி விண்ணுக்கு அனுப்பி உள்ளனர். இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி பெற வேண்டும்.
000